ரஜினி சென்ற அதே கோவிலுக்கு குடும்பத்துடன் சென்ற சரத்குமார்.. வைரல் வீடியோ..!

  • IndiaGlitz, [Saturday,June 01 2024]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் சென்ற கோவிலுக்கு நடிகர் சரத்குமார், தனது மனைவி ராதிகா மற்றும் மகனுடன் சென்ற வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அபுதாபிக்கு சென்ற நிலையில் அங்குள்ள இந்து கோயிலுக்கு சென்றார் என்பதும் பிரதமர் மோடி திறந்து வைத்த இந்த கோவிலை அவர் சுற்றிப் பார்த்த புகைப்படங்கள் வீடியோக்கள் வைரலானது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் தற்போது அதே கோவிலுக்கு நடிகர் சரத்குமார், அவருடைய மனைவி ராதிகா மற்றும் மகன் ஆகியோர் சென்ற வீடியோவை சரத்குமார் தனது சமூக வலை தளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

பிப்ரவரி 14 ஆம் தேதி பிஏபிஎஸ் சுவாமிநாராயண் கோவில் திறக்கப்பட்ட நிலையில், திறப்பு விழாவுக்குப் பிறகு, எனது குடும்பத்துடன் அந்த கோயிலுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அமைதி மற்றும் நல்லிணக்கம் கொண்ட இந்த ஆலயத்திற்கு நாங்கள் மேற்கொள்ளும் மூன்றாவது விஜயமாகும். நாங்கள் மே 28ஆம் தேதி அந்த கோவிலுக்கு சென்றோம்.

இக்கோயிலில் காணப்பட்ட காட்சிகள், உணரப்பட்ட ஆன்மீக உணர்வுகள், தெய்வீக ஒளி ஆகியவை அமைதியை தருகின்றன. குறிப்பாக அங்குள்ள சுவாமிஜியின் ஆசி பெற்று தெய்வீக தரிசனத்தை முடித்தோம்’ என்று நடிகர் சரத்குமார் பதிவு செய்துள்ளார்.

More News

இசை வெளியீட்டு விழாவுக்கு முன்பே வெளியான 'இந்தியன் 2' பாடல்கள் .. அனிருத் பாடியது எத்தனை பாடல்கள்?

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவான 'இந்தியன் 2' படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை 6 மணிக்கு தொடங்க இருக்கும் நிலையில் சற்றுமுன்

குன்றக்குடி முருகன்: அதிசயங்கள் நிறைந்த தலம்! | ஆன்மீக பேச்சாளர் விஜயகுமார் பேட்டி

ஆன்மீகக்ளிட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், புகழ்பெற்ற ஆன்மீக பேச்சாளர் விஜயகுமார், குன்றக்குடி முருகன் கோவிலின் சிறப்புகள்,

சமந்தா வெயிட்டே 50 கிலோ தான்.. ஆனால் எவ்வளவு எடையை தூக்கினார் தெரியுமா?

நடிகை சமந்தாவின் உடல் எடை 50 கிலோ என்று இருப்பதாக கூறப்படும் நிலையில் அவர் 42 கிலோ எடையை தூக்கி உள்ளதாக வெளிவந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

குழந்தையை விட குரங்கு சேட்டை பண்றாங்களே நயன்தாரா.. க்யூட் புகைப்படங்கள்..!

நடிகை நயன்தாரா தனது குடும்பத்தினருடன் ஹாங்காங் சுற்றுலா சென்றுள்ளார் என்பதும் அங்கிருந்து கொண்டு அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யும் புகைப்படங்கள்,

'கருடன்' படம் பார்க்க டிக்கெட் கொடுத்த தியேட்டர் நிர்வாகம்.. வட்டாட்சியர் எடுத்த அதிரடி நடவடிக்கை..

சூரி நடித்த 'கருடன்' என்ற திரைப்படம் நேற்று வெளியாகியுள்ள நிலையில் இந்த படம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது என்பதும் அரங்கு நிறைந்த காட்சிகளாக தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில்