27 வருடங்களுக்கு பின் இணைந்த சரத்குமார் - தேவயானி.. மீண்டும் ஒரு சூர்யவம்சம்?
Send us your feedback to audioarticles@vaarta.com
சரத்குமார் மற்றும் தேவயானி இணைந்து நடித்த ’சூரிய வம்சம்’ என்ற திரைப்படம் கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான நிலையில் 27 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் ஒரே படத்தில் இருவரும் இணைந்து நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சித்தார்த் நடிக்க இருக்கும் 40வது திரைப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படத்தை சாந்தி டாக்கீஸ் என்ற நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் ’8 தோட்டாக்கள்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ஸ்ரீகணேஷ் இயக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் இணைந்த நான்கு பிரபலங்கள் குறித்து அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. முதலாவது ஆக இந்த படத்தில் சரத்குமார் இணைகிறார். இன்று சரத்குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்து இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சாந்தி டாக்கீஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது .
இதனை அடுத்து இந்த படத்தில் தேவயானி ஒரு முக்கிய கேரக்டரில் இணைகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் நாயகியாக மீதா ரகுநாத் இணைகிறார். இவர் ஏற்கனவே மணிகண்டன் நடித்த ’குட் நைட்’ திரைப்படத்தில் நாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் இன்னொரு நாயகியாக சைத்ரா அச்சார் என்பவர் இணைந்துள்ளார். இவர் கன்னட திரையுலகின் பிரபல நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.
சரத்குமார், தேவயானி, மீதா ரகுநாத் மற்றும் சைத்ரா அச்சார் ஆகிய நான்கு பிரபலங்கள் ’சித்தார்த் 40’ படத்தில் இணைந்த நிலையில் இன்னும் யார் யார் இந்த படத்தில் இணைகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Glad to welcome our fav household name #Devayani mam for our Production No.2 #Siddharth40 !
— Shanthi Talkies (@ShanthiTalkies) July 14, 2024
Directed by @sri_sriganesh89 . #Siddharth @realsarathkumar @iamarunviswa pic.twitter.com/bBuGfIJX84
We are elated to welcome the ever charming supreme star @realsarathkumar sir for our Production No.2 #Siddharth40 , Directed by @sri_sriganesh89#HBDSarathKumar @iamarunviswa pic.twitter.com/cgxgKiuoep
— Shanthi Talkies (@ShanthiTalkies) July 14, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments