ஒருவழியாக 'போர் தொழில்' ஓடிடி ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு.. ரசிகர்கள் உற்சாகம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் நடிப்பில் உருவான ‘போர் தொழில்’ என்ற திரைப்படம் கடந்த ஜூன் மாதம் 9ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் எதிர்பாராத வகையில் சூப்பர் வெற்றி பெற்றது என்றும் ரூ.50 கோடிக்கு அதிகமாக வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தை ஜூலை மாதம் ஓடிடியில் வெளியிட திட்டமிடப்பட்டு இருந்த நிலையில் திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக கூடியதால் ஓடிடி ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி ஆகஸ்ட் 11 என்று அறிவிக்கப்பட்டுள்ளது . இதனை இந்த படத்தின் நாயகன் அசோக் செல்வன் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். எனவே ஆகஸ்ட் 11ஆம் தேதி சோனி லைவ் ஓடிடியில் இந்த படம் வெளியாக உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது
திரையரங்களில் வெற்றி இந்த படம் ஓடிடியில் நல்ல வரவேற்பு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
My Dear Makkalay, it’s confirmed. #PorThozhil is streaming on @SonyLIV from Aug 11th! :) #PorThozhilOnSonyLIV #SonyLIV pic.twitter.com/tSDRXsaDLE
— Ashok Selvan (@AshokSelvan) August 1, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments