சரத்குமார் - அசோக்செல்வனின் 'போர் தொழில்': ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
இளம் ஹீரோ அசோக் செல்வனுடன் சரத்குமார் நடித்து வந்த 'போர் தொழில்’ என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
’சூது கவ்வும்’ என்ற திரைப்படத்தில் அறிமுகம் ஆகி அதன் பிறகு ‘தெகிடி’ ’கூட்டத்தில் ஒருவன்’ ’ஹாஸ்டல்’ உட்பட பல திரைப்படங்களில் நாயகனாக நடித்தவர் இளம் ஹீரோ அசோக் செல்வன். இவருடன் சரத்குமார் இணைந்து நடித்த ’போர் தொழில்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய்யின் ’வாரிசு’ ராகவா லாரன்ஸ் நடித்த ‘ருத்ரன்’ மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ போன்ற படங்களில் சமீபத்தில் நடித்த சரத்குமார் தற்போது இளம் ஹீரோ அசோக் செல்வன் உடன் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் ஜூன் 9ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் அசோக் செல்வன் ஜோடியாக ’கிடாரி’ ’வெற்றிவேல்’ போன்ற படங்களில் நடித்த நடிகை நிகிலா விமல் நடித்துள்ளார். அப்பலாஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை விக்னேஷ் ராஜா என்பவர் இயக்கி உள்ளார்.
Get ready for an edge-of-the-seat chase! #PorThozhil in cinemas near you on 9th June 2023#PorThozhilOn9thJune@ApplauseSocial #E4Experiments @epriusstudio @nairsameer @deepaksegal @e4echennai @cvsarathi #PoonamMehra @vigneshraja89@ashokselvan @realsarathkumar @nikhilavimal1 pic.twitter.com/rNMfbsrgAq
— Applause Entertainment (@ApplauseSocial) May 17, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com