அஜித் எடுத்த தெளிவான முடிவு: சரத்குமார் பாராட்டு
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் தல அஜித்தின் ரசிகர்கள் சிலர் பாஜகவில் இணைந்தவுடன் பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன், அஜித் ரசிகர்களும், அஜித்தும் தமிழகத்தில் தாமரை மலர உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்
இதனையடுத்து தெளிவான அறிக்கை ஒன்றை வெளியிட்ட அஜித், தனது தொழில் சினிமா என்றும், அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என்றும், தன்னுடைய பெயரை அரசியலுக்காக பயன்படுத்த வேண்டாம் என்றும் கூறினார். இந்த அறிக்கைக்கு திரையுலகினர் மட்டுமின்றி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் பாராட்டு தெரிவித்தனர்
அந்த வகையில் தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த நடிகரும் அரசியல்வாதியுமான சரத்குமார், 'அஜித் அப்படி ஒரு அறிக்கை வெளியிட்டு தன்னிலை விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லாவிட்டாலும், தெளிவாக 'எனக்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை, என்னுடைய தொழில் சினிமா' என்று அறிக்கை விட்டார். நாம் என்ன செய்கிறோம் என்ற இவ்வாறான தெளிவு எனக்கும் இருந்திருக்க வேண்டும்' என்று சரத்குமார் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments