மனோரமா இறுதிச்சடங்கில் முதல்வர் பேசவில்லையா? சரத்குமார் விளக்கம்

  • IndiaGlitz, [Wednesday,October 14 2015]

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில் சரத்குமார் அணியினர்களும், விஷால் அணியினர்களும் தீவிர பிரச்சாரத்தில் உள்ளனர். இந்நிலையில் மனோரமாவின் இறுதிச்சடங்கிற்கு வந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, மனோரமா குறித்து பிரபுவிடம் மட்டுமே சில தகவல்களை கேட்டு தெரிந்து கொண்டதாகவும், அவருக்கு அருகில் நின்றிருந்த சரத்குமாரை அவர் கண்டு கொள்ளவில்லை என்றும் கடந்த இரண்டு நாட்களாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

தேர்தல் நெருங்கும் நிலையில் ஆளுங்கட்சியின் ஆதரவு சரத்குமாருக்கு இல்லை என்பதுபோல இந்த செய்திகள் மிகைப்படுத்தியதால், இதுகுறித்து சரத்குமார் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

அன்றைய தினம் தான் முதல்வரை சந்தித்து பேசியதாகவும், ஆனால் பேசிவிட்டு வெளியே வரும்போது எடுத்த புகைப்படங்களை மட்டும் ஒருசில ஊடகங்கள் வெளியிட்டு இல்லாத ஒன்றை கூறி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தவறான செய்திகள் கலங்க படுத்தும் உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்புவதில்தான் எத்தனை மகிழ்ச்சி என அவர் வருத்தத்துடன் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே ஆளுங்கட்சி ஆதரவு நடிகர்கள் யாருக்கு வேண்டுமானாலும் அவர்கள் இஷ்டம்போல் நடிகர் சங்க தேர்தலில் வாக்களிக்கலாம் என அதிமுக தலைமை கூறியுள்ள நிலையில் இந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.