ஜெயலலிதாவின் கடைசி கதாநாயகன் சரத்பாபுவா? ஆச்சரியமான தகவல்..!
- IndiaGlitz, [Tuesday,May 23 2023]
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ஸ்ரீதர் இயக்கத்தில் உருவான 'வெண்ணிறை ஆடை’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானாலும் அவரது முதல் கதாநாயகன் எம்ஜிஆர் என்பதும் இருவரும் இணைந்து ’ஆயிரத்தில் ஒருவன்’ என்ற திரைப்படத்தில் நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஜெயலலிதாவின் கடைசி திரைப்படத்தில் நேற்று காலமான சரத்பாபு தான் கதாநாயகன் என்ற தகவல் இன்றைய சினிமா ரசிகர்களுக்கு ஒரு ஆச்சரியமான தகவலாக உள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 1964 ஆம் ஆண்டு முதல் திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் எம்ஜிஆர், சிவாஜி உள்பட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து அவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த 1980 ஆம் ஆண்டு அரசியலில் நுழைவதற்கு முன்னர் ஜெயலலிதா கடைசியாக நடித்த திரைப்படம் ’நதியை தேடி வந்த கடல்’. இந்த படத்திற்கு பின்னர் அவர் அதிமுகவில் இணைந்து அதன் பின் முதல்வர் ஆகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஜெயலலிதாவின் கடைசி திரைப்படத்தில் நாயகனாக நடித்தது சரத் பாபு என்ற தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் ஜெயலலிதாவின் முதல் கதாநாயகன் எம்ஜிஆர் என்றால் கடைசி கதாநாயகன் சரத்பாபு என்பது குறிப்பிடத்தக்கது.