பிரதமர் மோடியின் தனி அமைச்சகம் திட்டம்: சரத்குமார் பேட்டி
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் குடிநீர் பிரச்சனைகளை தீர்க்க தனி அமைச்சகம் தொடங்க திட்டமிட்டுள்ளதாக நடிகரும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் தெரிவித்தார்.
நேற்று டெல்லி அசோகா ஓட்டலில் பாஜக தலைவர் அமித்ஷா வைத்த விருந்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். அந்த வகையில் இந்த விருந்தில் நடிகர் சரத்குமாரும் கலந்து கொண்டார். இந்த விருந்தில் கலந்து கொண்ட பின்னர் இன்று சென்னை திரும்பிய சரத்குமார் செய்தியாளர்களிடம் பேசியபோது, 'கருத்துக்கணிப்புகளைத் தாண்டி தமிழகத்தில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றும், மோடி மீண்டும் பிரதமர் ஆனவுடன் நாட்டில் நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க மத்தியில் தனி அமைச்சகம் உருவாக்க திட்டம் வைத்திருப்பதாகவும் கூறினார்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும் அதிமுக-பாஜக கூட்டணிக்கு ஆதரவளித்தது என்பதும், சரத்குமார் இந்த கூட்டணிக்காக தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரம் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது
Proud to take part in the most important meeting. PM, CM of TN & all the alliance party heads discussed & resolved to work harder for the upliftment of the poor & to make India strong economic global power in the years to come. #PMO @narendramodi #TNPolitics pic.twitter.com/Gz9psLytzm
— R Sarath Kumar (@realsarathkumar) May 21, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com