பிரதமர் மோடியின் தனி அமைச்சகம் திட்டம்: சரத்குமார் பேட்டி

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் குடிநீர் பிரச்சனைகளை தீர்க்க தனி அமைச்சகம் தொடங்க திட்டமிட்டுள்ளதாக நடிகரும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் தெரிவித்தார்.

நேற்று டெல்லி அசோகா ஓட்டலில் பாஜக தலைவர் அமித்ஷா வைத்த விருந்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். அந்த வகையில் இந்த விருந்தில் நடிகர் சரத்குமாரும் கலந்து கொண்டார். இந்த விருந்தில் கலந்து கொண்ட பின்னர் இன்று சென்னை திரும்பிய சரத்குமார் செய்தியாளர்களிடம் பேசியபோது, 'கருத்துக்கணிப்புகளைத் தாண்டி தமிழகத்தில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றும், மோடி மீண்டும் பிரதமர் ஆனவுடன் நாட்டில் நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க மத்தியில் தனி அமைச்சகம் உருவாக்க திட்டம் வைத்திருப்பதாகவும் கூறினார்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும் அதிமுக-பாஜக கூட்டணிக்கு ஆதரவளித்தது என்பதும், சரத்குமார் இந்த கூட்டணிக்காக தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரம் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 

More News

உடம்பை குறைத்து ஸ்லிம் ஆன தல அஜித்! வைரலாகும் புகைப்படம்

தல அஜித் நடித்து முடித்துள்ள 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில் அவரது அடுத்த படமான

சூர்யாவின் 'என்.ஜி.கே' சென்சார் தகவல்கள்!

சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிய 'என்.ஜி.கே' திரைப்படம் வரும் 31ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸாகவுள்ள நிலையில் இன்று இந்த படம் சென்சாருக்கு சென்றது

பட்டப்பகலில் சுட்டு கொல்லப்பட்ட 'டிக்டாக்' பிரபலம்

டெல்லியில் டிக்டாக் பிரபலமும் ஜிம் பயிற்சியாளருமான 27 வயது இளைஞர் ஒருவர் மூன்று பேர் கும்பலால் சரமாரியாக சுட்டுக்கொல்லப்பட்டார்

த்ரிஷாவின் 'ராங்கி' படம் குறித்த முக்கிய அறிவிப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் 'பேட்ட', மக்கள் செல்வன் விஜய்சேதுபதியுடன் '96' என தொடர்ந்து வெற்றிப்படங்களில் நடித்து வரும் நடிகை த்ரிஷா, தற்போது நடித்து வரும் படங்களில் ஒன்று 'ராங்கி'

ஜெயம் ரவியின் அடுத்த படத்தின் நாயகியாகும் பிரபல பாலிவுட் நடிகை

ஜெயம் ரவி நடித்து முடித்துள்ள 'கோமாளி' திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து விரைவில் வெளிவரவுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் ஆரம்பமாகிவிட்டது.