நடிகர் சங்க தேர்தல். சரத்குமார் மனுதாக்கல்
Send us your feedback to audioarticles@vaarta.com
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் இம்மாதம் 18ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் இன்று முதல் மனுதாக்கல் தொடங்கியது. சரத்குமார் மற்றும் விஷால் ஆகியோர்களின் அணிகள் இந்த தேர்தலில் நேருக்கு நேர் மோதவுள்ளனர்
ஓய்வு பெற்ற நீதிபதி பத்மனாபன் தேர்தல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று காலை அவர் முன் நடிகர் சங்க தலைவர் பதவிக்கு சரத்குமார் வேட்புமனு தாக்கல் செய்தார். சரத்குமார் மனுதாக்கல் செய்யும்போது அவரது அவரது ஆதரவாளர்கள் உடன் இருந்தனர். சரத்குமார் அணியின் மற்ற வேட்பாளர்கள் இன்னும் ஓரிரு நாட்களில் மனுதாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் விஷால் அணியினர் நாளை சென்னையில் ரஜினிகாந்த் அவர்களுக்கு சொந்தமான ஸ்ரீராகவேந்திரா திருமண மண்டபத்தில் தங்கள் ஆதரவாளர்கள் கூட்டத்தை கூட்டி உள்ளனர். இந்த கூட்டத்திற்கு பின்னரே இந்த அணியின் அதிகாரபூர்வ வேட்பாளர் பட்டியல் தயாராகும் என கூறப்படுகிறது. விஷால் அணியினர் நாளை மறுநாள் மனுதாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com