விஷால் மீது சரத்குமார் எடுத்த அதிரடி நடவடிக்கை
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சங்க தேர்தல் இன்னும் ஒன்பது நாட்களே உள்ள நிலையில் சரத்குமார் மற்றும் விஷால் அணியினர் தங்கள் அணிகளுக்கு ஆதரவு தேடி வருகின்றனர். மேலும் இரு அணியினர்களும் தங்கள் எதிரணியினர் மீது குற்றச்சாட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் விஷால் தன் மீது ஆதாரங்கள் இல்லாமல், பொய்யான குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து கூறி வருவதாக கூறியுள்ள சரத்குமார், இதுகுறித்து நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கு தொடர்ந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இன்று காலை எழும்பூர் நீதிமன்றத்திற்கு வந்த சரத்குமார், விஷாலுக்கு எதிரான மனுவை தாக்கல் செய்ததாகவும், இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வரும் 12ஆம் தேதி இந்த மனு விசாரணை செய்யப்படும் என கூறியதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இந்த வழக்கு குறித்து பாண்டவர் அணியினர் கூறும்போது, 'இந்த வழக்கை விஷால் சட்டரீதியாக சந்திப்பார்' என்று கூறினர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout