விண்வெளியில் இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்த 'சரஸ்வதி'

  • IndiaGlitz, [Friday,July 14 2017]

இந்தியா விண்வெளித்துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்து வரும் நிலையில் புனேவில் உள்ள இந்திய விஞ்ஞானிகள் சூரியனை விட 20 மில்லியன் பில்லியன் மடங்கு அதிக அடர்த்தி கொண்ட கேலக்ஸி என்று கூறப்படும் புதிய நட்சத்திர கூட்டத்தை கண்டுபிடித்துள்ளனர். இதற்கு விஞ்ஞானிகள் சரஸ்வதி என்று பெயரிட்டுள்ளனர்.
இந்த கேலக்ஸி 10 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உருவாகியிருக்கலாம் என்றும், இவை பூமியிலிருந்து 4 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளதாகவும் விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். இந்த நட்சத்திர கூட்டத்தில் 42 குழுக்களாக பத்தாயிரத்துக்கும் அதிகமான நட்சத்திர கூட்டங்கள் உள்ளதாக விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
இந்த கேலக்ஸி கூட்டத்திற்கு 'சரஸ்வதி' என்ற பெயர் ஏன் வைக்கப்பட்டது என்பது குறித்து விஞ்ஞானி ஒருவர் கூறியபோது, 'கல்விக்கான கடவுள் என்று கருதப்படும் சரஸ்வதிக்கு பல நதிகளின் இணைப்பு என்ற பொருளும் உண்டு. பத்தாயிரம் கேலக்ஸிகள் கொண்ட 42 கேலக்ஸி கொத்துகள் ஒன்றுடன் ஒன்று பிணைந்து உருவான இந்த கேலக்ஸி கூட்டத்திற்கு இதன் காரணமாக தான் சரஸ்வதி என பெயர் வைத்ததாக கூறினார்.