close
Choose your channels

ஜீன்ஸ் உடையில் சரண்யா பொன்வண்ணன்.. மகள், கணவருடன் க்யூட் புகைப்படங்கள்..!

Thursday, July 27, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை சரண்யா பொன்வண்ணன் தனது குடும்பத்துடன் வெளிநாட்டு சுற்றுலா சென்றுள்ள நிலையில் அங்கு அவர் ஜீன்ஸ் உடையில் கலக்கலான புகைப்படம் எடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரையுலகின் குணச்சித்திர நடிகை சரண்யா பொன்வண்ணன் இயக்குனர் பொன்வண்ணனை கடந்த 1995 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

இந்த நிலையில் நடிகை சரண்யா பொன்வண்ணன் தனது கணவர் மற்றும் இளைய மகளுடன் சுற்றுப்பயணம் செய்துள்ள நிலையில் அது குறித்து புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

திரைப்படங்களில் பெரும்பாலும் அவரை சேலை காஸ்ட்யூமில் பார்த்த ரசிகர்கள் ஜீன்ஸ் உடையில் பார்த்து ஆச்சரியமடைந்து கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

அதேபோல் அவரது மகள் புகைப்படத்தை பார்த்து சரண்யா பொன்வண்ணனுக்கு இவ்வளவு பெரிய மகளா என்று ஆச்சரியத்துடன் கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது. சரண்யா பொன்வண்ணனின் வெளிநாட்டு சுற்றுலா புகைப்படங்கள் கியூட்டாக இருப்பதாக பலர் தங்கள் கமெண்ட்ஸில் தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment