புதுமுக நடிகரை விஜய்சேதுபதியுடன் ஒப்பிட்ட சரண்யா பொன்வண்ணன்!

  • IndiaGlitz, [Wednesday,October 07 2020]

அஜித், விஜய், சூர்யா, விஜய்சேதுபதி, தனுஷ் உட்பட பல முன்னணி நடிகர்களுக்கு அம்மா கேரக்டரில் நடித்தவர் சரண்யா பொன்வண்ணன் என்பது தெரிந்ததே. அவரது நடிப்பிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பதும் ’தென்மேற்கு பருவக்காற்று’ படத்தில் அவர் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது அவர் அறிமுக நடிகர் நடித்து வரும் ராஜா நடித்து வரும் ’அருவா சண்டை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் நாயகன் மற்றும் தயாரிப்பாளர் ராஜாவின் நடிப்பு குறித்து சரண்யா கூறியதாவது:

கடந்த சில வருடங்களில் நான் கதை கேட்டவுடனே நடிக்க ஒப்புக்கொண்ட படம் இந்த படம் மட்டும்தான். விஜய்சேதுபதியுடன் 'தென்மேற்குப் பருவக்காற்று' படத்தில் நடிக்கும்போது எனக்கு ஏற்பட்ட அனுபவம் இந்தப் படத்தில் நடிக்கும்போது கிடைத்தது. ராஜா இந்த படத்தின் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தினார்.

இந்த படம் ஒரு சிறந்த கதைக்களம். இந்த படத்திற்கு டப்பிங் பேசும்போது நான் என்னை அறியாமலே கண் கலங்கி விட்டேன். இதுபோன்ற சமூக அக்கறை கொண்ட படத்தை தைரியமாக தயாரித்து அதில் கதாநாயகனாக நடித்துள்ள ராஜாவுக்கு எனது வாழ்த்துக்கள்' என்று கூறியுள்ளார்.

மேலும் இந்த திரைப்படம் சென்சாரில் யு சான்றிதழ் பெற்றுள்ளது என்பதும் இந்த படம் விரைவில் ரிலீசாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

More News

பல மொழிகளில் உருவாகும் தனுஷின் அடுத்த படம்!

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'ஜகமே தந்திரம்' என்ற திரைப் படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது என்றும் இந்த திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும்

விஜய்சேதுபதியின் 'க/பெ ரணசிங்கம்' இத்தனை கோடி வசூலா?

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் விருமாண்டி இயக்கத்தில் உருவான 'க/பெ ரணசிங்கம்' என்ற திரைப்படம் கடந்த 2ஆம் தேதி ஓடிடியில் வெளியானது என்பது தெரிந்ததே.

வேதியியல் துறைக்கான நோபல் பரிசை கூட்டாகத் தட்டிச் செல்லும் இரு பெண்கள்…

நோபல் பரிசு 2020 க்கான பட்டியலை நோபல் அறக்கட்டளை நேற்று முன்தினம் முதல் வெளியிட்டு வருகிறது.

மலைக் கிராமத்திற்கு மொபைல் டவர்… ஏழைகளின் நாயகன் சோனுசூட்டின் அடுத்த அதிரடி!!!

கொரோனா தாக்கத்தால் பள்ளி, கல்லூரி வகுப்புகள் அனைத்தும் தற்போது வரை ஆன்லைனில் நடைபெற்று வருகிறது.

தீபாவளி, தசரா, கிறிஸ்துமஸ் எல்லாம் இனி இப்படித்தான்… வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட மத்திய அரசு!!!

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த இந்தியாவில் கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலுக்கு வந்தது.