close
Choose your channels

சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' படத்தில் சரண் சக்தியின் கேரக்டர் இதுதானா?

Saturday, September 4, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வடசென்னை, நெற்றிக்கண் உள்பட ஒருசில படங்களில் நடித்த சரண் சக்தி, சூர்யாவின் ’எதற்கும் துணிந்தவன்’ படத்தில் இணைந்து உள்ளார் என்பதும் இவர் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பதும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சரண் சக்தி கேரக்டர் குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது.

சூர்யாவின் ’எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பொள்ளாச்சியில் நடந்த பாலியல் சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கதை என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த பாலியல் சம்பவத்தில் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்யும் இளைஞர்களில் ஒருவராக சரண் சக்தி நடித்து வருவதாகவும் அவருடன் சேர்ந்து இன்னும் ஒரு சிலரும் நடித்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

மேலும் இந்த படத்தில் சரண் சக்தி தான் மெயின் வில்லன் என்று கூறப்படுவதும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. சூர்யா போன்ற மாஸ் ஹீரோவுக்கு பிரபல வில்லன் நடிகர் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இந்த கதையின் அம்சத்தை பொறுத்து சரண் சக்தியே மெயின் வில்லனாக நடித்து வருவதாக கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் 51 நாட்கள் காரைக்குடி படப்பிடிப்பை முடித்துவிட்டு படக்குழுவினர் தற்போது சென்னை திரும்பியுள்ளனர். செப்டம்பர் இரண்டாவது வாரம் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்கும் என்று கூறப்பட்டது தெரிகிறது. இந்த நிலையில் காரைக்குடியில் இருந்து சென்னைக்கு திரும்பி கொண்டிருப்பதாக காரில் வந்து கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்றை இயக்குனர் பாண்டிராஜ் வெளியிட்ட நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment