அஜித் இயக்குனரின் அடுத்த படத்தில் ஆரவ்

  • IndiaGlitz, [Friday,January 04 2019]

அஜித் நடித்த 'காதல் மன்னன், 'அட்டகாசம்', 'அமர்க்களம்', 'அசல்' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சரண் இயக்கும் அடுத்த படத்தில் பிக்பாஸ் புகழ் ஆரவ் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த படத்திற்கு 'மார்க்கெட்ராஜா எம்பிபிஎஸ்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இயக்குனர் சரண் ஏற்கனவே கமல் நடித்த 'வசூல்ராஜா எம்பிபிஎஸ்' படத்தை இயக்கியிருந்த நிலையில் அதேபோன்ற டைட்டிலாக இந்த படத்தின் டைட்டில் இருந்தாலும் இரண்டு படங்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்றும், இந்த படத்தின் கதைக்கு இந்த டைட்டில் பொருத்தமாக இருந்ததால் வைக்கப்பட்டுள்ளதாகவும் சரண் தெரிவித்துள்ளார்.

ஆக்சன் காமெடியாக உருவாகவுள்ள இந்த படத்தில் ரயில்வே காண்ட்ராக்டர் கேரக்டரில் ஆரவ் நடிக்கவிருப்பதாகவும், இந்த கேரக்டர் லோக்கல் டான் போன்ற கேரக்டராக இருக்கும் என்றும் இயக்குனர் சரண் தெரிவித்துள்ளார். இந்த படத்திற்காக பெரம்பூரில் செட் அமைக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தில் ஆரவ்வுக்கு ஜோடியாக காவ்யா என்ற தெலுங்கு நடிகை நடிக்கவுள்ளதாகவும், ராதிகா, நாசர், சாயாஜி ஷிண்டே, யோகிபாபு உள்பட பலர் இந்த படத்தில் நடிக்கவுள்ளதாகவும் சரண் தெரிவித்தார்.