ஒவ்வொரு பெண்ணும் அழகுதான்: நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட கிரிக்கெட் வீராங்கனை

  • IndiaGlitz, [Monday,August 19 2019]

இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனைகளில் ஒருவரான சாரா டெய்லர், அந்த அணியின் விக்கெட் கீப்பராகவும் விளையாடி வந்தார். ஒருசில காரணங்களால் அவர் சமீபகாலமாக அணியில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தார். இருப்பினும் அவர் லோக்கல் டீம் ஒன்றில் விளையாடி தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கையில் கிளவுஸ் மட்டும் அணிந்தவாறு நிர்வாண புகைப்படம் ஒன்றை அவர் பதிவு செய்துள்ளார். மேலும் இந்த போஸ் அவர் நிர்வாணமாக நின்றவாறு விக்கெட் கீப்பிங் செய்வது போல் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த பதிவில் ஒவ்வொரு பெண்ணும் அழகுதான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சாரா டெய்லரின் இந்த பதிவிற்கு லட்சக்கணக்கில் லைக்ஸ்கள் குவிந்து வருகிறது. ஒரு கிரிக்கெட் வீராங்கனை நிர்வாண புகைப்படத்தை பதிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.