விவேக் அஸ்தி மீது மரக்கன்றை நட்ட உறவினர்கள்!

  • IndiaGlitz, [Monday,April 26 2021]

சமீபத்தில் பிரபல காமெடி நடிகர் விவேக் அவர்கள் மாரடைப்பால் காலமான நிலையில் அவரது இறுதி சடங்கிற்கு திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் விவேக்கின் அஸ்தி அவருடைய சொந்த ஊரான சங்கரன்கோவில் அருகில் உள்ள பெருங்கோட்டூர் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பெருங்கோட்டூர் கிராமத்தில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் விவேக்கின் அஸ்தியை வைத்து அதற்கு குடும்பத்தினர் மரியாதை செய்தனர்.

அதன்பின்னர் அங்கு தோண்டப்பட்ட குழியில் விவேக்கின் அஸ்தியை வைத்து மலர் தூவி உறவினர்கள் அதன்மீது மரக்கன்றுகளை நட்டனர். இந்த மரக்கன்றுகள் வளர்ந்து பெரிய மரமாகி விவேக்கின் நினைவாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த புகைப்படங்களும் வீடியோக்களும் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகின்றன.

More News

ஆக்சிஜன் இல்லாமல் தவித்த கணவருக்கு வாயோடு வாயாக சுவாசம் கொடுத்த மனைவி: நெஞ்சை உலுக்கும் புகைப்படம்!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் போதுமான ஆக்சிஜன் கிடைக்காமல் மூச்சுத் திணறிய கணவருக்கு வாயோடு வாயாக சுவாசம் அளிக்க முயன்ற மனைவி ஒருவரின் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வெளியாகி

பிக்பாஸ் முகின் படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட்லுக் அறிவிப்பு!

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் முகின் ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார் என்றும் அந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் வெளிவந்த செய்தியை

ஆக்சிஜன் வாங்க ரூ.40 லட்சம் கொடுத்த ஆஸ்திரேலிய ஐபிஎல் வீரர்: குவியும் பாராட்டுக்கள்

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் ஏற்படுவதன் காரணமாக ஆக்சிசன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் ஆக்சிஜன் வாங்குவதற்கு பலர் நிதி உதவி செய்து வருகின்றனர்

கீர்த்தி சுரேஷின் வேற லெவல் ஸ்டைலிஷ் லுக்: இணையத்தில் வைரல்!

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ் என்பதும் 'நடிகையர் திலகம்' என்ற திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்றவர் என்பதும் தெரிந்ததே 

ஸ்டெர்லைட்டை தவிர வேறு நிறுவனங்களே இல்லையா? கமல்ஹாசன் கேள்வி

ஆக்சிஜன் தேவைக்காக ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தமிழக அரசு அனுமதித்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை தவிர ஆக்சிஜன் தயாரிப்பதற்கு வேறு நிறுவனங்களே தமிழகத்தில் இல்லையா?