சுவாமி ஐயப்பன் வாழ்க்கை வரலாறு படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் - அனுஷ்கா

  • IndiaGlitz, [Sunday,March 10 2019]

ஒவ்வொரு வருடமும் ஐயப்பன் சீசனின்போது ஒரு புதிய ஐயப்பன் குறித்த திரைப்படம் வெளியாகி வருகிறது. ஆனால் இம்முறை பிரபலங்கள் இணையும் ஒரு ஐயப்பன் படம் உருவாகவுள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என நான்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்க, இந்த படத்தை ஸ்ரீகோகுலம் கோபாலன் தயாரிக்கவுள்ளார்.

இதுவரை பல ஐயப்பன் படங்கள் வந்திருந்தாலும் பிரசாந்த் என்பவர் ஒரு வித்தியாசமான புதிய வடிவில் ஐயப்பன் பட கதையை எழுதியுள்ளதாகவும், இந்த படம் நிச்சயம் ஐயப்ப பக்தர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களுக்கும் பிடிக்கும் என்றும் தயாரிப்பாளர் கோபாலன் தெரிவித்துள்ளார்.

இந்த படத்தின் முக்கிய கேரக்டர் ஒன்றில் அனுஷ்கா ஷெட்டி நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், இந்த பக்தி படத்தில் இசையமைக்க ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தயாரிப்பாளர் கோபாலன் மேலும் கூறினார். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் நடைபெறவுள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மான், அனுஷ்கா, சந்தோஷ்சிவன் போன்ற பிரபலங்கள் இணையும் இந்த ஐயப்பன் படத்திற்கு நிச்சயம் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்திற்கு தேர்தல் ஆணையம் கொடுத்த சின்னம்

நடிகர் கமல்ஹாசன் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 'மக்கள் நீதி மய்யம்' என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். முறைப்படி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்த கமல்ஹாசன்

திருமணத்திற்கு முந்தைய நாளில் சாயிஷாவின் நடனம்: வைரலாகும் வீடியோ

நடிகர் ஆர்யா, நடிகை சாயிஷா கடந்த ஆண்டு வெளியான 'கஜினிகாந்த்' படத்தில் இணைந்து நடித்தபோது இருவரும் காதல் கொண்டனர்,. இந்த காதலுக்கு இருவீட்டாரும் பச்சைக்கொடி காட்டியதை

அஜித் படத்தை அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் நடிக்கும் அடுத்த படம்

தல அஜித் நடித்து வரும் 'நேர் கொண்ட பார்வை' படத்தில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே.

மோடி ஒரு பயங்கரவாதி: ராகுல்காந்தி முன் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகை!

பிரதமர் மோடி பயங்கரவாதி போல் இருப்பதாகவும் அவர் எப்போது குண்டு போடுவார் என மக்கள் ஒவ்வொரு நிமிடமும் பயந்து கொண்டிருப்பதாகவும் நடிகையும் அரசியல்வாதியுமான விஜய்சாந்தி பேசியுள்ளது

தேமுதிகவுக்கு ஒரே ஆப்சன்: கூட்டணி உண்டா? இல்லையா?

தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறியது போல் 'ஒரு பெண் இருந்தால் பத்து பேர் பார்க்க வருவார்கள்' என்பது உண்மைதான்.