ரஜினியின் அடுத்த படத்தில் 'தளபதி -துப்பாக்கி' கனெக்சன்
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள அடுத்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளார் என்பதும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் முதல் தொடங்கவுள்ளது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப் கலைஞர்களின் தேர்வில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் பிசியாக உள்ளார். இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். இந்த தகவலை சந்தோஷ் சிவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.
சந்தோஷ் சிவன் ஏற்கனவே ரஜினிகாந்த் நடித்த 'தளபதி' மற்றும் தளபதி விஜய் நடித்த 'துப்பாக்கி உள்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து பல தேசிய விருதுகள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினியின் 166வது திரைப்படமான இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படம் குறித்த முழு தகவல்களுடன் கூடிய அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Finally ???? very excited to work with Rajini Sir after Thalapathy ??
— SantoshSivanASC. ISC (@santoshsivan) February 10, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com