ஓடிடியில் ரிலீஸாகும் 3 நாட்களில் திரையரங்குகளில் இருந்து தூக்கப்பட்ட படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
திரையரங்குகளில் ரிலீசாகி மூன்றே நாட்களில் தூக்கப்பட்ட திரைப்படம் தற்போது ஓடிடியில் விரைவில் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ’இனம்’. இந்த திரைப்படம் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளிவந்த நிலையில் ஒரு சில அரசியல்வாதிகள் இந்த திரைப்படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து மூன்று நாட்களில் திரையரங்குகளில் இருந்து தூக்கப்பட்டது.
இதனை அடுத்து தற்போது 7 வருடம் கழித்து இந்த படம் ஓடிடியில் பிளாட்பாரத்தில் ரிலீஸ் ஆக உள்ளதாக இயக்குனர் சந்தோஷ்சிவன் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். இலங்கையில் நடைபெற்ற தமிழ்-சிங்கள இனப்போர் குறித்த கதையம்சம் கொண்ட இந்த படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உகந்தா, கரண், சரிதா, கருணாஸ், அனாகி, ஷ்யாம் சுந்தர், செளம்யா உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு விஷால் இசையமைத்திருந்தார். இந்த படம் ஓடிடியில் வரவேற்பை பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Inam will be soon on an Ott platform for folks who want to see it ??
— SantoshSivanASC. (@santoshsivan) May 13, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com