சந்தோஷ் சிவன் வீட்டில் நிகழ்ந்த எதிர்பாராத துக்கம்.. திரையுலகினர் இரங்கல்..!

  • IndiaGlitz, [Thursday,May 09 2024]

பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் சகோதரர் எதிர்பாராத விதமாக மாரடைப்பால் காலமானதையடுத்து திரையுலகினர் அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் பாலிவுட் திரையுலகின் பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் என்பதும் இவர் தேசிய விருது உள்பட பல விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சந்தோஷ் சிவனின் உடன் பிறந்த சகோதரர் சங்கீத் சிவன் மலையாள திரைப்பட இயக்குனர் என்பதும் இவர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானதாக தகவல் வெளியாகி உள்ளது.

சந்தோஷ் சிவனின் சகோதரர் சங்கீத் சிவன் ஆரம்ப காலத்தில் ஆவண படங்கள் இயக்கிய நிலையில் அதன் பிறகு பல மலையாள திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பதும் 1990 ஆம் ஆண்டு வெளியான ’வியூகம்’ என்ற திரைப்படம் ஒரு போலீஸ் கிரைம் படமாக இருந்தது என்பதும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மோகன்லால் நடித்த ’யோதா’ உள்பட பல மலையாள படங்களை இயக்கிய இவர் சில பாலிவுட் படங்களை இயக்கியுள்ளார்.

65 வயதான சங்கீத் சிவன் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவு காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக காலமானார். இதனை அடுத்து திரையுலகினர் சந்தோஷ் சிவனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

More News

ரூ.2 கோடி சம்பளம் கொடுத்தும் நடிக்க முடியாது என கூறிய சாய் பல்லவி.. என்ன காரணம்?

2 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்க விளம்பர நிறுவனம் ஒன்று முன் வந்த போதிலும் அதில் நடிக்க முடியாது என நடிகை சாய்பல்லவி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

'தளபதி 69' படத்தில் இணைகிறாரா 'மாஸ்டர்' பிரபலம்.. எச். வினோத் நெருங்கிய நண்பர்..!

தளபதி விஜய் நடித்து வரும் 'கோட்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் இருக்கும் நிலையில் அவர் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான 'தளபதி 69' படம் குறித்த தகவல்கள்

ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்த படத்தின் நாயகி இவர்தான்.. 900 கோடி வசூல் படத்தில் நடித்தவர்..!

பிரபல இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் அடுத்த படத்தில் 900 கோடி வசூல் செய்து சாதனை செய்த படத்தின் நாயகி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

சிம்பு என்ட்ரி ஆனவுடன் மிகப்பெரிய அளவில் வியாபாரமான 'தக்லைஃப்'.. எத்தனை கோடி தெரியுமா?

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'தக்லைஃப்' படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் சிம்பு இணைந்ததாக

பக்கத்து பக்கத்து மாவட்டங்களில் விக்ரம், துருவ் விக்ரம் படங்களின் படப்பிடிப்பு.. வைரல் புகைப்படம்..!

விக்ரம் நடித்து வரும் 'வீர தீர சூரன்' என்ற படத்தின் படப்பிடிப்பு நெல்லை மாவட்டத்தில் நடைபெற்று வரும் நிலையில் அதற்கு பக்கத்து மாவட்டமான தூத்துக்குடி மாவட்டத்தில் தான் துருவ் விக்ரம் நடித்து வரும்