close
Choose your channels

சந்தோஷ் சிவன் வீட்டில் நிகழ்ந்த எதிர்பாராத துக்கம்.. திரையுலகினர் இரங்கல்..!

Thursday, May 9, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் சகோதரர் எதிர்பாராத விதமாக மாரடைப்பால் காலமானதையடுத்து திரையுலகினர் அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் பாலிவுட் திரையுலகின் பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் என்பதும் இவர் தேசிய விருது உள்பட பல விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சந்தோஷ் சிவனின் உடன் பிறந்த சகோதரர் சங்கீத் சிவன் மலையாள திரைப்பட இயக்குனர் என்பதும் இவர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானதாக தகவல் வெளியாகி உள்ளது.

சந்தோஷ் சிவனின் சகோதரர் சங்கீத் சிவன் ஆரம்ப காலத்தில் ஆவண படங்கள் இயக்கிய நிலையில் அதன் பிறகு பல மலையாள திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பதும் 1990 ஆம் ஆண்டு வெளியான ’வியூகம்’ என்ற திரைப்படம் ஒரு போலீஸ் கிரைம் படமாக இருந்தது என்பதும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மோகன்லால் நடித்த ’யோதா’ உள்பட பல மலையாள படங்களை இயக்கிய இவர் சில பாலிவுட் படங்களை இயக்கியுள்ளார்.

65 வயதான சங்கீத் சிவன் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவு காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக காலமானார். இதனை அடுத்து திரையுலகினர் சந்தோஷ் சிவனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment