'யார் நீங்க' என்று ரஜினியை கேட்டது ஏன்? தூத்துகுடி வாலிபர் விளக்கம்
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று தூத்துகுடி சென்று துப்பாக்கி சூடு சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தபோது சந்தோஷ் என்ற இளைஞர் ரஜினியை பார்த்து 'யார் நீங்க' என்று கேள்வி கேட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதூ. இந்த நிலையில் தான் எதற்காக அந்த கேள்வியை ரஜினியிடம் கேட்டேன் என்பது குறித்து சந்தோஷ் பேட்டி ஒன்றில் கூறியதாவது
ரஜினியை பார்த்து 'யார் சார் நீங்க' என்று கேட்டேன், அதற்கு அவர் நான் தாம்ப்பா ரஜினிகாந்த் என்று கூறினார். எங்கேயிருந்து வருகின்றீர்கள் என்று கேட்டதற்கு சென்னையில் இருந்து வருகிறேன் என்று கூறினார். அதற்கு நான் சென்னையில் இருந்து தூத்துகுடி வர 100 நாட்கள் ஆகுமா? என்று கேட்டேன். உடனே அவர் சிரித்து கொண்டே சென்றுவிட்டார் என்று கூறினார்
ரஜினிகாந்த் என்பவர் ஒரு சக்தி வாய்ந்த மனிதர். அவர் எங்களுடைய 100 நாள் போராட்டத்தில் ஒருநாள் கலந்து கொண்டிருந்தால் அந்த போராட்டம் வலிமையானதாக இருந்திருக்கும். ஆனால் அப்போதெல்லாம் வராத அவர் 144 தடை உத்தரவு நீங்கிய பின்னர், ஆலையை மூடிய பின்னர் வந்ததை எங்களால் ஏற்று கொள்ள முடியவில்லை
போராட்டம் செய்தவர்கள் எல்லாம் சமூக விரோதிகளா? குழந்தைகள், பெண்களை போலீசார் அடிக்கும்போது நாங்கள் போலீசாரை தடுத்து தள்ளிவிட்டது சமூக விரோதமா? எங்கள் போராட்டத்தை ரஜினிகாந்த் கொச்சைப்படுத்தியதால், வேண்டுமென்றேதான் 'யார் நீங்க' என்ற கேள்வியை கேட்டேன். இவ்வாறு சந்தோஷ் தனது பேட்டியில் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout