பா ரஞ்சித்-ஆர்யா படத்தில் வில்லனாகும் தமிழ் பட ஹீரோ
Send us your feedback to audioarticles@vaarta.com
பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிக்க இருக்கும் ’சல்பேட்டா’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த படம் வடசென்னை பகுதியில் உள்ள குத்துச்சண்டை வீரரின் கதையம்சம் கொண்டது என்பதும் இந்த படத்தில் ஆர்யா குத்துச்சண்டை வீரராக நடிக்க இருக்கிறார் என்பதும் தெரிந்ததே. இந்த படத்தில் குத்துச்சண்டை கேரக்டருக்காக ஆர்யா கடுமையாக உடற்பயிற்சி செய்து உண்மையான குத்துச்சண்டை வீரர் தனது உடலை மாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடிகர் சந்தோஷ் பிரதாப் நடிக்க உள்ளார். இவர் ஏற்கனவே பார்த்திபன் இயக்கிய ’கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ என்ற படத்தில் நாயகனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் சந்தோஷ் பிரதாப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் இந்த படத்திற்காக கடுமையாக உடற்பயிற்சி செய்வது போன்று வீடியோவை வெளியிட்டு உள்ளார். எனவே இந்த வீடியோவில் இருந்து இவரும் இந்த படத்தில் குத்துச்சண்டை வீரராக நடிக்க இருப்பதாக கருதப்படுகிறது அநேகமாக இவர் ஆர்யாவுடன் மோதும் வில்லன் கேரக்டரில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் சந்தோஷ் வெளியிட்ட வீடியோவைப் பார்த்து ஆர்யா தனது சமூக வலைத்தளத்தில் பாராட்டி உள்ளார் சந்தோஷ் நாராயணன் இசையில் முரளி ஒளிப்பதிவில் இந்த படம் உருவாகவுள்ளது.
Here’s brother @Actorsanthosh with chiseled calisthenic Physique Ready for @beemji sir challenge ?????? well done brother ????????Looking awesome ?? See u in the ring ???? #PaRanjithFilm #Arya30 #Prelook #PrepLook @Music_Santhosh @johnkokken1 @K9Studioz pic.twitter.com/Z4lB7n0i05
— Arya (@arya_offl) March 5, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com