புதிய ஹைப்பர்லிங்க் கிரைம்-த்ரில்லர் திரைப்படத்தில் சந்தோஷ் பிரதாப்!

  • IndiaGlitz, [Tuesday,December 14 2021]

புதிய ஹைப்பர்லிங்க் திரைப்படத்தில் நடிகர் சந்தோஷ் பிரதாப் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சந்தோஷ் பிரதாப், மகேந்திரன் மற்றும் மைக்கேல் தங்கதுரை ஆகிய மூவர் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை இன்று நடந்தது. பிளாக் ஹோல் பிக்சர்ஸ் புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை ஸ்டீபன் ராஜ் என்பவர் இயக்க உள்ளார். இவர் குறும்படங்கள் மூலம் புகழ் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் இன்றைய பூஜையில் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நாயகியாக வைஷ்ணவி நடிக்க உள்ளார் என்பதும் ராஜேஷ், லிவிங்ஸ்டன், சூப்பர் சுப்பராயன், கூல் சுரேஷ் உள்பட பலர் நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .

தமிழ் திரையுலகில் சமீப காலமாக ஹைபர்லிங்க் திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் இந்த படமும் பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.