என் டீம்ல சந்தோஷ் நாராயணன், வெங்கட் பிரபு, ரத்னகுமார், லோகேஷ் கனகராஜ் உண்டு: கார்த்திக் சுப்புராஜ்..!

  • IndiaGlitz, [Sunday,May 28 2023]

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ’என்னுடைய டீமில் சந்தோஷ் நாராயணன், வெங்கட் பிரபு, ரத்னகுமார், லோகேஷ் கனகராஜ் ஆகியோர் உண்டு என கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இன்று சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே ஐபிஎல் இறுதிப்போட்டி நடைபெற இருக்கும் நிலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இந்த போட்டியை நேரடியாக ஒளிபரப்பு உள்ளது. இந்த நிலையில் ‘ஜிகர்தண்டா 2’ படத்தின் குழுவினர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு பேட்டியளித்தனர்.

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் நடிகர் எஸ்ஜே சூர்யா ஆகிய இருவரையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் பேட்டி எடுத்த நிலையில், ‘நீங்கள் ஒரு கிரிக்கெட் டீம் அமைத்தால் உங்களுடைய டீமில் எந்தெந்த திரை நட்சத்திரங்களை சேர்ப்பீர்கள் என்று கார்த்திக் சுப்புராஜ் இடம் கேட்கப்பட்டது.

அதற்கு கார்த்திக் சுப்புராஜ், ‘சந்தோஷ் நாராயணன் ஒரு மிகப்பெரிய கிரிக்கெட் வெறியர், எனவே அவர்தான் என்னுடைய முதல் சாய்ஸ் என்று கூறினார். அதன் பிறகு வெங்கட் பிரபு, ரத்னகுமார் ஆகியோர்களை கூறிய கார்த்திக் சுப்புராஜ், அடுத்து ஷங்கர் சார் என்று கூறினார். ஆனால் ஷங்கரை ஏற்றுக்கொள்ள முடியாது, நீங்கள் உங்கள் டீமில் இருந்தே ஒரு நபரை கூறுங்கள் என்று கேட்டபோது லோகேஷ் கனகராஜ் என்று தெரிவித்தார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் எஸ்ஜே சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் ’ஜிகர்தண்டா 2’ படம் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.