ரஜினி-விஜய் இசையமைப்பாளருடன் 3வது முறையாக இணையும் சித்தார்த்

  • IndiaGlitz, [Wednesday,June 08 2016]


பா.ரஞ்சித் இயக்கிய 'அட்டக்கத்தி' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான சந்தோஷ் நாராயணன் ஒருசில வருடங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இளையதளபதி விஜய் உள்பட பெரிய நடிகர்களின் படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பை பெற்றார். தற்போது கோலிவுட் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஏற்கனவே நாலைந்து படங்களுக்கு இசையமைத்து வரும் சந்தொஷ் தற்போது சித்தார்த் நடிக்கவுள்ள புதிய படம் ஒன்றுக்கு இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
ஜில் ஜங் ஜக்' படத்தை அடுத்து சித்தார்த் 'சைத்தான் கி பச்சா' என்ற படத்தில் நடிக்கவுள்ளார். ஷங்கரின் 'கப்பல்' படத்தை இயக்கிய கார்த்தி கிரிஷ் இயக்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கவுள்ளது. ஏற்கனவே சித்தார்த் நடித்த 'ஜிகர்தண்டா', 'எனக்குள் ஒருவன்' ஆகிய படங்களுக்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன் மூன்றாவது முறையாக அவருடைய படத்திற்கு இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அரவிந்த் சிங் ஒளிப்பதிவும், அந்தோணி படத்தொகுப்பும் செய்யவுள்ள இந்த படத்தின் நாயகி உள்பட மற்ற நடிகர், நடிகைகளின் தேர்வு நடைபெற்று வருகிறது.

More News

விஜய் சேதுபதி-கே.வி.ஆனந்த் படத்தின் நாயகி இவர்தான்

கோ, அயன், அனேகன் உள்பட பல வெற்றி படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் தற்போது புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார்...

சதுரங்க வேட்டை' நாயகி மாயமானது ஏன்? புதிய தகவல்கள்

'சதுரங்க வேட்டை' படத்தில் நடித்த நடிகை இஷாரா, தற்போது 'எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா' என்ற படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்...

'விஜய் 60' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு எங்கே?

கடந்த தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியான விஜய்யின் 'தெறி' சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் தற்போது அவர் தனது 60வது படத்தில் பரதன் இயக்கத்தில் நடித்து வருகிறார்...

பாலியல் தொழிலாளி வேடத்தில் 'கபாலி' நடிகை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'கபாலி' படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள தன்ஷிகாவுக்கு தற்போது வாய்ப்புகள் குவிந்து வருகிறது அனைவரும் தெரிந்ததே...

மகேஷ்பாபு-முருகதாஸ் படத்தின் வில்லன் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு

துப்பாக்கி, கத்தி உள்பட பல வெற்றி படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது 'அகிரா' என்ற பாலிவுட் படத்தை இயக்கி முடித்துள்ளார். சோனாக்ஷி சின்ஹா...