ரஜினி-விஜய் இசையமைப்பாளருடன் 3வது முறையாக இணையும் சித்தார்த்

  • IndiaGlitz, [Wednesday,June 08 2016]


பா.ரஞ்சித் இயக்கிய 'அட்டக்கத்தி' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான சந்தோஷ் நாராயணன் ஒருசில வருடங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இளையதளபதி விஜய் உள்பட பெரிய நடிகர்களின் படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பை பெற்றார். தற்போது கோலிவுட் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஏற்கனவே நாலைந்து படங்களுக்கு இசையமைத்து வரும் சந்தொஷ் தற்போது சித்தார்த் நடிக்கவுள்ள புதிய படம் ஒன்றுக்கு இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
ஜில் ஜங் ஜக்' படத்தை அடுத்து சித்தார்த் 'சைத்தான் கி பச்சா' என்ற படத்தில் நடிக்கவுள்ளார். ஷங்கரின் 'கப்பல்' படத்தை இயக்கிய கார்த்தி கிரிஷ் இயக்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கவுள்ளது. ஏற்கனவே சித்தார்த் நடித்த 'ஜிகர்தண்டா', 'எனக்குள் ஒருவன்' ஆகிய படங்களுக்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன் மூன்றாவது முறையாக அவருடைய படத்திற்கு இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அரவிந்த் சிங் ஒளிப்பதிவும், அந்தோணி படத்தொகுப்பும் செய்யவுள்ள இந்த படத்தின் நாயகி உள்பட மற்ற நடிகர், நடிகைகளின் தேர்வு நடைபெற்று வருகிறது.