ஜகமே தந்திரம்-ஒரு பிரிட்டிஷ் படைப்பு… மனம் திறக்கும் சந்தோஷ் நாராயணன்!
- IndiaGlitz, [Friday,June 11 2021]
தனுஷ் நடிப்பில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகிய உள்ள “ஜகமே தந்திரம்’‘ திரைப்படம் வரும் ஜுன் 18 ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், இந்தப் படத்தை ஒரு வகையில் பிரிட்டிஷ் படைப்பு என்றே சொல்லலாம், பல நாட்டு இசையையும் இந்தப் படத்தில் பயன்படுத்தி இருக்கிறேன், கூடவே நமக்கு அந்நியமாகி விடக்கூடாது என்பதிலும் கவனம் செலுத்தி இருக்கிறேன் எனத் தெரிவித்து இருக்கிறார்.
“ஜகமே தந்திரம்” திரைப்படத்தின் அனைத்துப் பாடல்களும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்தப் படத்திற்கான இசையமைப்பு குறித்து சந்தோஷ் நாராயணன் அவர்கள் பேட்டி அளித்து இருக்கிறார். அதில் இப்படத்தின் இசைப் பணிகளுக்கு நிறைய நேரம் கிடைத்தது. உலக அளவில் பயணப்படும் படம் என்பதால் நிறைய மெனக்கெட்டேன். பல இடங்களில் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன். இந்தப் படத்தின் இசை நம் மக்களுக்கு அந்நியமாக இருக்கக்கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். இந்தப் படம் ஒரு வகையில் பிரிட்டிஷ் படைப்பென்றே கூறலாம் எனத் தெரிவித்து இருக்கிறார்.
மேலும் ஒரு கலைஞனாக பல விதமான புதிய முயற்சிகளுக்கு இப்படத்தில் இடம் கிடைத்தது எனவும் தெரிவித்து இருக்கிறார். சந்தோஷ் நாராயணன் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான “அட்டக்கத்தி” திரைப்படத்திற்கு முதலில் இசையமைத்தார். பின்பு “பீட்சா“, “சூதுகவ்வும்”, “குக்கூ”, “ஜிகர்தண்டா”, “இறுதிச்சுற்று”. “காலா”, “ஜிப்சி” எனப் பல படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். தற்போது “ஜகமே தந்திரம்” திரைப்படத்திலும் இவரது பாடல் பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது.