'எஞ்சாயி எஞ்சாமி' மூலம் கிடைத்த வருமானம் எவ்வளவு?  சந்தோஷ் நாராயணன் கூறிய அதிர்ச்சி தகவல்..!

  • IndiaGlitz, [Tuesday,March 05 2024]

சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் அவரது மகள் தீ மற்றும் அறிவு ஆகியோர் பாடிய 'எஞ்சாயி எஞ்சாமி' என்ற பாடல் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியானது என்பதும் இந்த பாடல் யூடியூபில் மிகப்பெரிய அளவில் பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பாடல் 48 கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர் என்பதும் இதனால் யூடியூபில் இருந்து இந்த பாடலுக்கு மிகப்பெரிய வருமானம் வந்திருக்கும் என்று கூறப்படுகிறது. அது மட்டும் இன்றி மியூசிக் வீடியோவின் உரிமை ஆகியவையும் சேர்த்தால் ஒரு பெரிய தொகை வருமானமாக வந்திருக்கும் என்று தான் கூறப்பட்டது.

இந்த நிலையில் இந்த பாடலில் கிடைத்த வருமானம் குறித்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தற்போது மனம் திறந்து தெரிவித்துள்ள கருத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர் இது குறித்து வெளியிட்ட வீடியோவில் 'எஞ்சாயி எஞ்சாமி' பாடல் வெளியாகி மூன்று ஆண்டுகளாக போகிறது. இந்த பாடலுக்கு கிடைத்த வரவேற்பு பற்றி நீங்கள் அறிந்ததே. ஆனால் இந்த பாடல் மூலம் எங்களுக்கு கிடைத்த வருமானம் என்ன என்பதை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.

இதுநாள் வரையில் இந்த பாடல் மூலம் ஒரு பைசா கூட வருமானம் எங்களுக்கு கிடைக்கவில்லை, சம்பந்தப்பட்ட மியூசிக் லேபிளை தொடர்பு கொள்ள முயற்சிக்கிறோம். எங்களுக்கு ஏற்பட்ட இந்த அனுபவத்தால் நான் எனது சொந்த ஸ்டுடியோவை தொடங்கி உள்ளேன்.

தனி இசை கலைஞர்களுக்கு வெளிப்படை தன்மையுடன் இயங்கும் தளங்கள் தேவை, இதில் கூடுதலாக எனது யூடியூப் சேனல் வருமானமும் அந்த மியூசிக் லேபிலுக்கு செல்கிறது. இதை பொதுத்தளத்தில் சொல்ல விரும்பினேன், தனி இசை கலைஞர்கள் இனி கவலைப்பட வேண்டாம், உங்களுக்கு கிடைக்க வேண்டியது கிடைத்தே தீரும் என்றும் சந்தோஷ் நாராயணன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

மிகப்பெரிய வெற்றி பெற்ற ஒரு தனியிசை பாடல் மூலம் ஒரு பைசா கூட தனக்கு வருமானம் இல்லை என்று சந்தோஷ் நாராயணன் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

More News

'மஞ்சும்மள் பாய்ஸ்' இயக்குனரின் அடுத்த படத்தில் தமிழ் மாஸ் நடிகரா? செம ஜாக்பாட்..!

சமீபத்தில் வெளியான மலையாள திரைப்படமான 'மஞ்சும்மள் பாய்ஸ்' என்ற திரைப்படம் கேரளாவில் மட்டுமின்றி தமிழகத்திலும் வசூலில் சக்கை போடு போடுகிறது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் 100 கோடி

யுவன், பிரேம்ஜியை அடுத்து 'கோட்' படத்தில் இணைந்த வெங்கட்பிரபுவின் குடும்ப உறுப்பினர்..!

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் 'கோட்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் வெங்கட் பிரபுவின் சகோதரர் யுவன் சங்கர்

15 வயதில் தொடங்கிய நடிப்பு.. திரையுலகில் 19 ஆண்டுகள்.. தமன்னாவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

நடிகை தமன்னா திரையுலகில் 15 வயதில் நாயகியாக அறிமுகமாகி கடந்த 19 ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி உட்பட பல மொழிகளில் நடித்து வருகிறார் என்பதும் தற்போது அவர் ஒரு பிசியான நடிகையாக இருந்து

சாப்பிட வழியில்லாம சாகுறத்துக்கு பேரு பட்டினி சாவு இல்ல.. வசனம் எழுதிய எழுத்தாளருக்கு சூரி வாழ்த்து..!

சாப்பிட வழியில்லாம சாகுறத்துக்கு பேரு பட்டினி சாவு இல்ல.. என்ற வசனத்தை எழுதிய எழுத்தாளருக்கு சிறந்த வசனகர்த்தா என்ற விருது தமிழக அரசால் வழங்கப்பட்ட நிலையில் அவருக்கு நடிகர் சூரி வாழ்த்து

அண்ணாமலை அப்பாவிற்கு திருமண நாள் வாழ்த்துக்கள்: 'சிறகடிக்க ஆசை' நடிகர் வெளியிட்ட வீடியோ..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' சீரியலில் அப்பாவாக நடித்து வரும் நடிகர் மற்றும் இயக்குனர் ஆர் சுந்தர்ராஜனின் திருமண நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் இந்த சீரியலில் நடித்த