பிரித்து மேய்ந்துவிட்டார்! 'காலா' இசையமைப்பாளர் குறிப்பிடுவது யாரை?

  • IndiaGlitz, [Thursday,March 01 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கியுள்ள 'காலா' திரைப்படம் வரும் ஏப்ரல் 27ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் டீசர் இன்று காலை 11 மணிக்கு வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் காஞ்சி பெரியவர் ஜெயேந்திர சரஸ்வதி அவர்கள் காலமானதை அடுத்து இந்த படத்தின் டீசர் நாளை வெளியாகும் என்று இந்த படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் 'காலா' படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் சற்றுமுன்னர் தனது சமூகவலைத்தளத்தில் ஒரு சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார். 'காலா' படத்திற்காக பிரபல பாடகர் யோகி பி அவர்களுடன் இணைந்து பணியாற்றியதில் மிக்க மகிழ்ச்சி. அருமையான, அற்புதமான திறமைகள் கொண்ட அவர் காலா டீசரில் தனது பங்களிப்பை அளித்ததற்காக நன்றியை தெரிவித்து கொள்கிறேன். பிரித்து மேய்ந்து விட்டீர்கள் ஐயா' என்று சந்தோஷ் நாராயணன் பதிவு செய்துள்ளார்.

இதில் இருந்து நாளை வெளியாகவுள்ள 'காலா' டீசரில் யோகி பி பாடிய பாடல் இடம்பெறும் என தெரிகிறது. 'கபாலி' படத்தின் டீசரில் அருண்காமராஜ் பாடிய 'நெருப்புடா' பாடல் பட்டையை கிளப்பியது போல் 'காலா' படத்தில் யோகி பி, தூள் கிளப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

வடிவேலுவை வழிக்கு கொண்டு வர ஷங்கர் செய்த அதிரடி

கடந்த 2006ஆம் ஆண்டு வெளியாகிய 'இம்சை அரசன் 23ஆம் புலிகேசி' திரைப்படம் நல்ல வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை அதே வடிவேலு, சிம்புதேவன் கூட்டணியில் தயாரிக்க ஷங்கர் முடிவு செய்தார்.

தந்தை-மகனை ஒன்று சேர்த்த ஸ்ரீதேவியின் மரணம்

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மரணம் காரணமாக அவரது கணவர் போனிகபூரும், அவரது முதல் மனைவியின் மகனான அர்ஜூன் கபூரும் இணைந்துள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.

மீண்டும் சூப்பர் ஹீரோ கதைக்களத்தில் மிஷ்கின்

இயக்குனர் மிஷ்கின் நடிப்பில் ஜீவா நடித்த சூப்பர் ஹீரோ கதையான 'முகமூடி' திரைப்படம் கடந்த 2012ஆம் ஆண்டு வெளியாகி எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

'தல 59' பட இயக்குனர் யார்? பரபரப்பான தகவல்

தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கவுள்ள 'விசுவாசம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து தொடங்கவுள்ளது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

பூரண மதுவிலக்கு குறித்து கமல்ஹாசனின் வித்தியாசமான கருத்து

தற்போதைய தமிழக அரசின் முக்கிய வருமானம் டாஸ்மாக் தான். மதுவை ஒழிப்போம், பூரண மதுவிலக்கை கொண்டு வருவோம் என்று அனைத்து அரசியல் கட்சிகளும் கொள்கையாக வைத்திருந்தாலும்