பாலிவுட் மாஸ் நடிகர் படத்திற்கு இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன்.. குவியும் வாழ்த்துக்கள்..!

  • IndiaGlitz, [Tuesday,December 17 2024]

பாலிவுட் திரையுலகின் மாஸ் நடிகர் நடிக்கும் படத்தில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பணிபுரிய இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் வெளியான பான் இந்திய திரைப்படமான ’கல்கி 2898 ஏடி’ என்ற படத்திற்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன் தற்போது ’கல்கி 2’ மற்றும் ’சூரியா 44’ ஆகிய படங்களில் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் பாலிவுட் மாஸ் நடிகர் சல்மான் கான் நடிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ’சிக்கந்தர்’ என்ற படத்திற்கும் சந்தோஷ் நாராயணன் தான் பின்னணி இசை அமைக்க இருப்பதாக கூறப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2025 ஆம் ஆண்டு ரம்ஜான் பண்டிகை தினத்தில் வெளியாக இருக்கும் ’சிக்கந்தர்’ திரைப்படத்தில் சல்மான்கான் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் காஜல் அகர்வால், சுனில் ஷெட்டி, சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். அதிரடி ஆக்சன் படமான இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

More News

ரஜினி பெயரை மாற்றியவர்.. கலைஞர் வீட்டு கருவாட்டு வாசம்: நடிகர் செந்தாமரை மகள் பேட்டி..!

பிரபல குணச்சித்திர நடிகர் செந்தாமரையின் மகள் ராஜலட்சுமி நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார்.

2ஆம் பாகம் ஆகிறது விஷாலின் சூப்பர்ஹிட் படம்.. மீண்டும் இணையும் வெற்றி கூட்டணி..!

விஷால் நடிப்பில் சூப்பர் ஹிட் ஆகி 100 கோடி ரூபாய் வசூல் செய்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

சூரிக்கு ஜோடியாகும் 'பொன்னியின் செல்வன்' நடிகை.. டைட்டில் அறிவிப்பு..!

நடிகர் சூரி நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் ஜோடியாக, 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகை இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

'சூர்யா 45' படத்தில் இணைந்த 3வது நாயகி.. ஆர்ஜே பாலாஜியின் திட்டம் தான் என்ன?

சூர்யா நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யாவின் 45-வது திரைப்படத்தில் நாயகியாக த்ரிஷா நடிக்க இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

சமந்தாவை அடுத்து ஒரு பாடலுக்கு நடனமாடுகிறாரா நயன்தாரா? எந்த ஹீரோ படத்தில்?

'புஷ்பா' திரைப்படத்தில் நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாடிய நிலையில், ஏற்கனவே பல ஹீரோயின்கள் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளனர்.