நல்லா சாப்பிடுங்க, அப்படியே 'தளபதி 63' அப்டேட் கொடுங்க: பிரபல இசையமைப்பாளர் வேண்டுகோள்

  • IndiaGlitz, [Wednesday,February 06 2019]

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வரும் நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு ராமோஜிராவ் பிலிம் சிட்டியிலும் அதனையடுத்து வெளிநாட்டிலும் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாக திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ரஜினி, விஜய் உள்பட பிரபல நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்த பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பாடலாசிரியர் விவேக்கிடம் 'தளபதி 63' படத்தின் அப்டேட்டை அவ்வப்போது கொடுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்

அதில் அவர் கூறியதாவது: ஹாய் விவேக் சார், எப்படி இருக்கிங்க! நல்லா சாப்பிடுங்க, நிறைய தண்ணீர் குடிங்க. ஃபேமிலியை கேட்டதா சொல்லுங்க, அப்படியே விஜய் 63 அப்டேட்ட் அப்பப்போ கொடுங்க. இங்க எல்லாம் நல்லா போகுது என்று கூறியுள்ளார். இதற்கு 'ஏன் தெய்வமே' என்று பாடலாசிரியர் விவேக் பதிலளித்துள்ளார்.

More News

என்னை நீ மறவாதிரு: இன்று வெளியாகும் நயன்தாரா படப்பாடல்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு கடந்த ஆண்டு வெற்றி ஆண்டாக இருந்த நிலையில் இந்த ஆண்டின் ஆரம்பமே அவருக்கு விஸ்வாசம்' என்ற பிரமாண்ட வெற்றியை கொடுத்துள்ளது

'தளபதி 63' படத்தில் விஜய்யின் கேரக்டர் குறித்த தகவல்

தளபதி விஜய், நயன்தாரா நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் 'தளபதி 63' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பைரஸியை ஒழிப்பது என் கையில் இல்லை: விஷால் அதிரடி

தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட ஆன்லைன் பைரசி இணையதளங்களை ஒழிக்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் என்ற முறையில் நான் கஷ்டப்பட்டாலும்

நயன்தாராவின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

தல அஜித்துடன் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'விஸ்வாசம்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ள நிலையில் தற்போது 'ஐரா', 'கொலையுதிர்க்காலாம்,

'96' படக்குழுவுக்கு பார்த்திபன் கொடுத்த '96' பரிசு

நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் கொஞ்சம் வித்தியாசமாகவும் கவிதைத்தனமாகவும் சிந்திக்க கூடியவர். எந்த சினிமா விழாவாக இருந்தாலும்