சந்தோஷ் நாராயணனுடன் கூட்டணி சேர்ந்த யுவன்ஷங்கர்ராஜா

  • IndiaGlitz, [Friday,March 30 2018]

ஒரே படத்திற்கு இரண்டு இசையமைப்பாளர்கள் இசையமைப்பது கோலிவுட் திரையுலகில் புதியது அல்ல. மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி, எம்.எஸ்,விஸ்வநாதன் - இளையராஜா, போன்றோர் ஒரே படத்தில் பணிபுரிந்துள்ளனர்.

அந்த வகையில் தற்போது ஒரு படத்திற்கு யுவன்ஷங்கர்ராஜா மற்றும் சந்தோஷ் நாராயணன் ஆகியோர் இணைந்து இசையமைக்கவுள்ளனர். யுவன்ஷங்கர்ராஜா தயாரிக்கும் பேய்ப்பசி’ என்ற படத்தில் ஹரிபாஸ்கர் என்பவர் ஹீரோவாக நடித்து வருகிறார். இவர் யுவனின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீநிவாஸ் கவிநாயகம் என்ற அறிமுக இயக்குனர் இயக்கும் இந்தப் படத்தில், நமிதா மற்றும் அம்ரிதா ஐயர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா மற்றும் சந்தோஷ் நாராயணன் ஆகியோர் சேர்ந்து இசையமைக்கிறார். இரண்டு முன்னணி இசையமைப்பாளர்கள் இணைந்து இசையமைப்பதால் இந்த படத்தின் பாடல்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஒரு பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.