கமல் கட்சியில் இருந்து விலகும் பிரபலங்கள்: என்ன ஆகும் கட்சியின் எதிர்காலம்?

  • IndiaGlitz, [Thursday,May 13 2021]

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து அக்கட்சியின் துணைத் தலைவர் டாக்டர் மகேந்திரன் சமீபத்தில் விலகிய நிலையில் தற்போது மேலும் இரண்டு பிரபலங்கள் விலகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என்பதும், கமல்ஹாசனே கோவை தெற்கு தொகுதியில் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத்தலைவர் டாக்டர் மகேந்திரன் சமீபத்தில் விலகியதை அடுத்து மேலும் சில பிரபலங்கள் விலகுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் சந்தோஷ் பாபு அவர்கள் தெரிவித்துள்ளார். தனது சொந்த காரணங்களுக்காக விலகுவதாகவும் இருப்பினும் கமல்ஹாசனுடன் தனது நெருங்கிய நட்பு தொடரும் என்றும் அவர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்

இதேபோல் சந்தோஷ் பாபுவை அடுத்து பத்மபிரியாவும் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். சில காரணங்களுக்காக நான் சார்ந்திருந்த மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவதாக முடிவு செய்துள்ளேன் என்றும் அதை எனது தொகுதி மக்களான உங்களுடன் பகிர்வது எனது கடமை என கருதி தெரிவித்துக் கொள்கின்றேன் என்றும் எனது களப்பணி எப்போதும்போல் சிறப்பாக தொடரும் என்றும் பத்மபிரியா தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்

கமல் கட்சியில் இருந்து முக்கிய பிரபலங்கள் விலகிக் கொண்டு இருப்பதை அடுத்து அக்கட்சியின் எதிர்காலம் என்ன ஆகும் என்று கவலையுடன் தொண்டர்கள் இருக்கின்றனர்.

More News

16 வயது சிறுமியின் ரொமான்ஸ் வீடியோ: குழந்தைகள் நல அலுவலகம் எடுத்த அதிரடி நடவடிக்கை!

சமூக வலைதளங்களில் ரொமான்ஸ் வீடியோ வெளியிட்ட 16 வயது சிறுமி குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

காண்டம் பரிசோதனையாளர் கேரக்டரில் சூர்யா-கார்த்தி பட நாயகி!

சூர்யா மற்றும் கார்த்தி நடித்த படங்களில் நாயகியாக நடித்த நடிகை ஒருவர் காண்டம் பரிசோதனையாளர் கேரக்டரில் நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

எதிர்க்கட்சியாக இருந்தபோது ரூ.1 கோடி, முதல்வரான பின் ரூ.25 லட்சமா? ஸ்டாலினுக்கு காயத்ரி ரகுராம் கேள்வி!

கொரோனாவால் உயிரிழக்கும் முன்கள பணியாளர்களுக்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி தரவேண்டும் என எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது கூறிய ஸ்டாலின் தற்போது முதல்வரான பின் 25 லட்சம் மட்டுமே

கொரோனாவால் நிரம்பி வழியும் சென்னை மருத்துவமனைகள்… நிலவரம் என்ன?

கொரோனா நோய்த்தொற்றின் முதல் அலை காலத்தில் ஒட்டுமொத்த தமிழகத்திலும் அதிகபட்சமாக தினம்தோறும் 7 ஆயிரம் புதிய பாதிப்புகள் ஏற்பட்டன

ஊரடங்கிலும் ரெட் அலார்ட்...  தருமபுரியின் அவலத்தை கூற எம்.பி  போட்ட டுவிட்...!

தருமபுரி மாவட்டத்தில் நாளுக்கு நாள்  நிலைமை மோசமாகி  வருவதால் அங்கு, ரெட் அலர்ட்  போடவேண்டும் என திமுக எம்பி டுவிட் போட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.