ஒரே படத்தில் இணையும் இரண்டு அடல்ட் காமெடி இயக்குனர்கள்

  • IndiaGlitz, [Friday,June 29 2018]

கோலிவுட்டில் அடல்ட் காமெடி படம் என்ற பிரிவை தொடங்கி வைத்தவர் ஆதிக் ரவிச்சந்திரன் என்று கூறலாம். இவர் இயக்கிய 'த்ரிஷா இல்லைனா நயன்தாரா' படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இருப்பினும் அவர் அந்த ஒரு படத்துடன் அடல்ட் காமெடியை நிறுத்திவிட்டார்.

அதேபோல் சமீபத்தில் 'ஹரஹர மகாதேவகி' மற்றும் 'இருட்டு அறையில் முரட்டு குத்து' ஆகிய இரண்டு அடல்ட் காமெடி படங்களை இயக்கி இரண்டையும் வெற்றிப்படமாக்கியவர் இயக்குனர் சந்தோஷ்.

இந்த நிலையில் ஆதிக் ஹீரோவாக நடிக்க சந்தோஷ் தயாரிக்கும் படம் ஒன்று உருவாகவுள்ளது. இந்த படத்திற்கு 'டிங் டாங் பெல்' என்ற டைட்டில் தேர்வு செய்யப்பட்டுள்ளதாம். டைட்டிலை பார்த்தே இந்த படமும் அடல்ட் காமெடி படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது

ஒரு அடல்ட் காமெடி இயக்குனர் என்றாலே படம் முழுவதும் ஒரே இரட்டை அர்த்த வசனமாக இருக்கும் நிலையில் ஒரே படத்தில் இரண்டு அடல்ட் காமெடி இயக்குனர்கள் இணைந்துள்ளதால் இந்த படம் வேற லெவலில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

More News

நேற்று பாலாஜி, இன்று மகத்: தொடரும் நித்யாவின் மோதல்

பிக்பாஸ் வீட்டில் உள்ள 16 போட்டியாளர்களில் நித்யாவுக்கும் இன்னொருவருக்கும் மட்டுமே இதுவரை பிரச்சனை வந்து கொண்டிருக்கின்றன. முதல் வாரம் வெங்காய பிரச்சனையில் கிட்டத்தட்ட எல்லோருமே நித்யாவை குறை கூறினர்.

நயன்தாராவின் 'கோலமாவு கோகிலா' சென்சார் தகவல்கள்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து முடித்துள்ள 'கோலமாவு கோகிலா' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது

கார்த்தியின் 'கடைக்குட்டி சிங்கம்' சென்சார் மற்றும் ரிலீஸ் தேதி தகவல்கள்

கார்த்தி, சாயிஷா நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா தயாரிப்பில் உருவாகியுள்ள 'கடைக்குட்டி சிங்கம்' படத்திற்கு ரிலீசுக்கு முன்னரே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் புதிய டுவிஸ்ட்: எஜமானர்களாக மாறிய பெண்கள்

பிக்பாஸ் வீட்டில் கடந்த மூன்று நாட்களாக ஆண்கள் எஜமானர்களாகவும், பெண்கள் வேலைக்காரிகளாகவும் இருக்கும் டாஸ்க் நடந்து கொண்டிருந்தது.

பிரகாஷ்ராஷை கொலை செய்ய திட்டமிட்டோம்: கைதான குற்றவாளி பரபரப்பு வாக்குமூலம்

பெங்களூரில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பெண் பத்திரிகையாளார் கவுரி லங்கேஷ் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார்.