திருமணத்தின் மீதான நம்பிக்கையே உங்களால் தான் வந்தது: சாந்தனு வாழ்த்து
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல இயக்குநர் கே பாக்யராஜ் தன்னுடன் ’டார்லிங் டார்லிங் டார்லிங்’ என்ற படத்தில் நடித்த நடிகை பூர்ணிமாவை கடந்த 1984 ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து இன்று அவருடைய 36 வது திருமண நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த திருமண நாளிற்கு கோலிவுட் திரையுலகில் பலர் பாக்கியராஜ்-பூர்ணிமா பாக்யராஜ் தம்பதிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்
இந்த நிலையில் பாக்யராஜ் மகனும் நடிகருமான சாந்தனு தனது சமூக வலைத்தளத்தில் தனது பெற்றோருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். உங்களுடைய 36 வருட திருமண வாழ்க்கை எனக்கு பல விஷயங்களை கற்று கொடுத்துள்ளது. திருமண பந்தத்தின் மீதான நம்பிக்கையே எனக்கு உங்களால் தான் வந்தது.
ஒவ்வொரு குழந்தையும் உங்களை போல் ஒரு பெற்றோர் வேண்டும் என்று எண்ணும்வகையில் வாழ்ந்து வரும் உங்கள் இருவரையும் கடவுள் ஆசிர்வதிப்பார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
Your 36 yrs of togetherness in good and bad times gives me so much of belief in love and faith in marriage ?? You are parents that every kid would hope to have ??
— Shanthnu ?? ஷாந்தனு Buddy (@imKBRshanthnu) February 7, 2020
God bless u both ??
Love u loads??#Happy36KBRPBR pic.twitter.com/vhL88CbLxr
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com