நான் பஞ்சாயத்து பண்ண வரல்ல: தல, தளபதி சண்டை குறித்து சாந்தனு

  • IndiaGlitz, [Saturday,April 18 2020]

கொரோனா பரபரப்பு நேரத்தில் தல அஜித் ரசிகர்களும், தளபதி விஜய் ரசிகர்களும் டுவிட்டரில் நெகட்டிவ் டேக் போட்டு சண்டை போட்டு வருவதை நடிகை கஸ்தூரி உள்பட பலர் கண்டித்து வருகின்றனர். இருப்பினும் இந்த டுவிட்டர் சண்டை இன்னும் நிற்காமல் தொடர்ந்து நீடித்து வருகிறது

இந்த நிலையில் இதுகுறித்து தளபதி விஜய்யின் தீவிர ரசிகரும், நடிகருமான சாந்தனு தனது டுவிட்டரில், ‘இங்க நான் ஒண்ணும் பஞ்சாயத்து பண்ண வரல்ல. அது என் வேலையும் இல்லை. ஆனால் இருதரப்புக்கும் என்னால் முடிந்த ஒரு அறிவுரை. யாரும் யாரையும் விட்டு கொடுக்க வேண்டாம். தளபதி ரசிகர்கள் ட்ரோல்லை ஆரம்பித்து இருந்தால், தல ரசிகர்களுக்கு எனது வேண்டுகோளாக அதை கண்டுகொள்ளாமல் மறந்துவிடும்படி கேட்டு கொள்கிறேன். அதேபோல் ஒருவேளை தல ரசிகர்கள் ஆரம்பித்து இருந்தால், தளபதி ரசிகர்கள் அதனை கண்டுகொள்ளாமல் மறந்துவிடவும். பதிலுக்கு பதில் கூறினால் பிரச்சனை வளர்ந்து கொண்டேதான் போகும்’ என்று கூறியுள்ளார்.

ஆனால் சாந்தனுவின் அறிவுரையை கேட்கும் மனநிலையில் இருதரப்பினர்களும் இல்லை என்பது இந்த டுவிட்டுக்கு பதிவாகி வரும் இருதரப்பினர்களின் கமெண்டுக்களில் இருந்து தெரிய வருகிறது

More News

ஊரடங்கின் எதிரொலி; பெண்களின் மீதான வன்முறை அதிகரித்துள்ளது!!! தேசிய மகளிர் ஆணையம் குற்றச்சாட்டு!!!

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக இந்தியாவில் மார்ச் 23 முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

அமேசான் பிரைமில் இருந்து நீக்கப்பட்ட சிவகார்த்திகேயன் படம்

சிவகார்த்திகேயன் நடிப்பில் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான திரைப்படம் 'ஹீரோ'. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது என்பது தெரிந்ததே

சூர்யா-கார்த்தி ரசிகர்களுக்கு பிரபல தயாரிப்பாளரின் வேண்டுகோள்!

கொரோனா வைரஸ் காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதை அடுத்து லட்சக்கணக்கான ஏழை எளிய மக்கள் வேலையின்றி, வருமானம் இன்றி பசியால் வாடுகின்றனர்.

மனைவி, குழந்தைகளுக்கு அரிசி-பருப்பு வாங்கி கொடுத்துவிட்டு தற்கொலை செய்த பெயிண்டர்

கடந்த சில வாரங்களாக இந்தியாவில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி நூற்றுக்கணக்கான மனித உயிர்களை பலி வாங்கிக் கொண்டிருக்கும் நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும்

கொரோனாவால் சிகிச்சை பெற்று வரும் மகளின் வருகைக்காக காத்திருக்கும் தாயின் சடலம்!

இங்கிலாந்து நாட்டில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தாய் மற்றும் மகள் ஆகிய இருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனாவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்