அஜித்தை புகழ்ந்த விஜய்யை ரசிக்கும் பிரபல நடிகர்

  • IndiaGlitz, [Sunday,April 26 2020]

தல அஜித்தின் பிறந்த நாள் இன்னும் ஒருசில தினங்களில் வர உள்ளதை அடுத்து இந்த ஆண்டு அவருடைய பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட அஜித் ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர். கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அஜித்தின் பிறந்தநாளை வெகு சிறப்பாக சமூக வலைத்தளங்களில் கொண்டாட அஜித் ரசிகர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில் அஜித்தின் அலுவலகத்திலிருந்து ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் வந்துள்ளது. இந்த வேண்டுகோளில் கொரோனா பாதிப்பால் நாட்டில் உள்ள பொதுமக்கள் அனைவரும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், அஜித் தனது பிறந்த நாளை கொண்டாடுவதை விரும்பவில்லை என்றும் எனவே அவருடைய வேண்டுகோளை ஏற்று இந்த ஆண்டு பிறந்த நாள் கொண்டாட்டத்தை தவிர்க்குமாறு ரசிகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அஜித் தரப்பில் இருந்து வெளிவந்துள்ள இந்த வேண்டுகோள் குறித்து விஜய்யின் தீவிர ரசிகரும், நடிகருமான சாந்தனு கூறியதாவது: அஜித்தின் இந்த வேண்டுகோளுக்கு நான் மிகவும் மரியாதை செலுத்துகிறேன். அவர் ஒரு பக்கா ஜென்டில்மேன் என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது. அதே நேரத்தில் அவருடைய பிறந்தநாளன்று நாம் அனைவரும் சேர்ந்து அவருக்கு வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என்றும் ஒவ்வொருவரும் தனித்தனியாக வீட்டிலிருந்தே அவருடைய பிறந்தநாளை கொண்டாட வேண்டும் சாந்தனு குறிப்பிட்டுள்ளார். சாந்தனுவின் இந்த டுவிட் தற்போது வைரலாகி வருகிறது.