ஊரு ஒண்ணா இருக்க என் தலையை வெட்டி கொடுக்கவும் தயார்.. 'இராவண கூட்டம்' டிரைலர்..!

  • IndiaGlitz, [Wednesday,April 05 2023]

நடிகர் சாந்தனு பாக்யராஜ், நடிகை கயல், நடிகர் பிரபு உள்பட பலர் நடிப்பில் உருவான ’ராவண கூட்டம்’ என்ற திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

‘மதயானை கூட்டம்’ என்ற வெற்றி திரைப்படத்தை இயக்கிய விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படம் முந்தைய படம் போலவே கிராமத்து கதையம்சம் கொண்டது என்பதும் ஒரு முக்கிய பிரச்சனையை இதில் கையாண்டுள்ளார் என டிரைலரில் இருந்து தெரியவந்துள்ளது. ஊரை இரண்டாக பிரித்து கலவரம் உண்டாக்கி அதில் புயல் குளிர் காயும் கயவர் கூட்டத்தை ஹீரோ சாந்தனு எப்படி முறியடிக்கிறார் என்பதுதான் இந்த படத்தின் இதை டிரைலரில் இருந்து தெரிகிறது.



நீண்ட இடைவேளைக்கு பிறகு சாந்தனுவுக்கு ஒரு வெற்றிப் படமாகவும் திரையுலக வாழ்வில் திருப்புமுனையை கொடுக்கும் படமாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்த படத்தின் பிரபு கேரக்டர் மிகவும் அழுத்தமாக உள்ளது என்பதும் நாயகி கயல் கேரக்டர் கதைக்கு வலுவாக இருக்கும் என்று தெரிகிறது.



விக்ரம் சுகுமாரன் இயக்கிய ’மதயானை கூட்டம்’ தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது போலவே இந்த ’ராவண கூட்டம்’ படமும் நிச்சயம் ஒரு சலசலப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜஸ்டின் பிரபாகரன் இசையில் உருவான இந்த படத்தை கண்ணன் ரவி தயாரித்துள்ளார்.

More News

கலாஷேத்ரா கல்லூரியின் பாலியல் விவகாரம்.. நடிகை அபிராமி கருத்துக்கு சின்மயி பதிலடி..!

சென்னை கலாஷேத்ரா கல்லூரி நடந்த மாணவிகளுக்கு நடந்த பாலியல் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த நடிகை அபிராமிக்கு பாடகி சின்மயி பதிலடி கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை நங்கநல்லூர் கோவில் குளத்தில் மூழ்கி 5 அர்ச்சகர்கள் பலி.. நடந்தது என்ன?

சென்னை நங்கநல்லூர் கோவில் குளத்தில் அர்ச்சகர்கள் ஐந்து பேர் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

இரட்டை குழந்தைக்கு பெயர் வைத்தவுடன் நயன் - விக்கி சென்றது எங்கே தெரியுமா? வைரல் புகைப்படங்கள்..!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் தங்களது இரட்டை குழந்தைகளுக்கு சமீபத்தில் பெயர் வைத்த நிலையில் தற்போது இருவரும் குலதெய்வம் கோயிலுக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 

மகள்களுடன் ஆக்ஷன் கிங் அர்ஜுன் எங்கே சென்றிருக்கிறார் தெரியுமா? வைரல் வீடியோ..!

ஆக்ஷன் கிங் அர்ஜுன் தனது மகள்களுடன் கேரளாவில் உள்ள கபினி அணை அருகே சென்ற நிலையில் அது குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

சன் டிவி 90s தொகுப்பாளினி ரத்னாவிற்கு இவ்வளவு பெரிய மகளா? 

சன் டிவி செய்தி வாசிப்பாளராக பல வருடங்களாக இருந்து வரும் ரத்னாவின் மகன், மகள் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.