'மகாராஜா' படத்தை மிஸ் செய்தாரா சாந்தனு? அவரே சொன்ன தகவல்..!

  • IndiaGlitz, [Wednesday,August 21 2024]

இந்தியாவின் தலைசிறந்த திரைக்கதை ஆசிரியர் என்று கே.பாக்யராஜ் போற்றப்படும் நிலையில் அவரது மகன் சாந்தனு ஒரே ஒரு சூப்பர் ஹிட் வெற்றி படத்திற்காக பல ஆண்டுகளாக காத்திருக்கிறார். இந்த நிலையில் ’மகாராஜா’ திரைப்படத்தில் முதலில் சாந்தனு தான் நடிக்க இருந்ததாகவும் ஆனால் அந்த படத்தை அவர் மிஸ் செய்ததாகவும் செய்திகள் வரும் நிலையில் சாந்தனு தனது சமூக வலைத்தளத்தில் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

சமீபத்தில் இயக்குனர் நிதிலன் சுவாமிநாதன் அளித்த பேட்டியில் ’நான் ஆரம்பத்தில் ஒரு கதையை பல நடிகர்களிடம் கூறினேன், குறிப்பாக சாந்தனு என்னுடைய கதையின் மீது நம்பிக்கை வைத்து அவரே சில தயாரிப்பாளர்களிடம் அழைத்துச் சென்றார். ஆனால் அந்த படம் உருவாகவில்லை.

அதன் பிறகு தான் நான் ’குரங்கு பொம்மை’ இயக்கினேன். மேலும் சாந்தனுவுக்கு கூறிய கதையின் ஒரு சிறு பகுதியை மட்டும் எடுத்துக் கொண்டு இயக்கிய படம் தான் ’மகாராஜா’ என்று கூறினார்.

இதுகுறித்து சாந்தனு தனது சமூக வலைத்தளத்தில், ‘மகாராஜா திரைப்படத்தின் மூலம் நிதிலன் உலக அளவில் ஒரு அங்கீகாரத்தை பெற்றுவிட்டது உண்மையில் மகிழ்ச்சி அடைகிறேன். 10 ஆண்டுகளுக்கு பிறகும் அவர் என்னுடைய பெயரை குறிப்பிட்டது ஆச்சரியமாக உள்ளது.

மேலும் ’மகாராஜா’ ஸ்கிரிப்ட்டை நானும் என் தந்தையும் நிராகரித்து விட்டதாக வெளியான செய்தியில் உண்மையில்லை. உண்மையில் நிதிலன் என்னிடம் கூறிய கதை குறித்து என் தந்தைக்கு தெரியாது. ஆனால் அதே நேரத்தில் தயாரிப்பாளர்கள் ரிஸ்க் எடுக்க தயாராக இல்லை, இருந்தாலும் அந்த படத்தின் கண்டன்ட் இன்று மகாராஜா ஆகியுள்ளது.

நான் இப்போதும் சிறந்த ஸ்கிரிப்டுகளை தான் தேடிக் கொண்டிருக்கிறேன். எல்லாவற்றிற்கும் காலம் தான் பதில் அளிக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

More News

பழம்பெரும் நடிகர் சோ மனைவி காலமானார். அரசியல் தலைவர்கள் இரங்கல்..!

தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர் சோ ராமசாமி கடந்த 2016 ஆம் ஆண்டு காலமான நிலையில் அவரது மனைவி இன்று காலை காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தோனி, சச்சினை அடுத்து இன்னொரு கிரிக்கெட் வீரரின் பயோகிராபி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

இந்திய கிரிக்கெட் வீரர்களான மகேந்திர சிங் தோனி மற்றும் சச்சின் டெண்டுல்கர் வாழ்க்கை வரலாறு திரைப்படங்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு

'வேட்டையன்' 'விடாமுயற்சி' அப்டேட்.. ரஜினி, அஜித் ரசிகர்கள் குஷி..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வரும் 'வேட்டையன்' மற்றும் அஜித் நடித்து வரும் 'விடாமுயற்சி' ஆகிய இரண்டு படங்களையும் தயாரித்து வரும் லைக்கா நிறுவனம்

திருத்தணி முருகன் கோவில்: சீதா சுரேஷ் அவர்கள் விளக்கும் ரகசியங்கள்!

பிரபல ஜோதிடர் சீதா சுரேஷ் அவர்கள், ஆன்மீகக்ளிட்ஸ் சேனலில் திருத்தணி முருகன் கோவிலின் ஆழமான ரகசியங்களைப் பகிர்ந்துள்ளார்.

புரோட்டா மாஸ்டர் கேரக்டரில் விஜய் சேதுபதி.. ஜோடியாகும் நித்யா மேனன்.. இயக்குனர் யார் தெரியுமா?

நடிகர் விஜய் சேதுபதி ஒரு திரைப்படத்தில் புரோட்டா மாஸ்டராக நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.