மாஸ்டர் விழாவில் சாந்தனு கூறிய குட்டி ஸ்டோரி

  • IndiaGlitz, [Sunday,March 15 2020]

மாஸ்டர் ஆடியோ விழாவில் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள நடிகர் சாந்தனு பாக்யராஜ் பேசியதாவது:

வாழ்க்கையில் ஒரு சீக்ரெட் புக் இருக்கிறது. நாம் மனதில் என்ன நினைக்கிறோமோ அதை திரும்பத் திரும்ப நினைத்தால் அது ஒரு நாள் கண்டிப்பாக நடக்கும். நான் என் மனதுக்குள் விஜய்யுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்று என் மனதுக்குள் அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பேன். என்னுடைய வாழ்நாள் ஆசை விஜய்யுடன் நடிக்க வேண்டும் என்பதுதான். நான் மட்டும் இன்றி என்னுடைய நலம் விரும்பிகள் அனைவருமே விஜய்யுடன் நான் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று கூறிக் கொண்டே வந்தார்கள். அவர்களுடைய ஆசீர்வாதத்தால் இன்று நான் இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளேன்.

மாநகரம் மற்றும் கைதி படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுக்க லோகேஷ் முயன்றார். ஆனால் அது நடக்கவில்லை. கடைசியாக இந்த படத்தில் எனக்கு ஒரு வாய்ப்பை கொடுத்துள்ளார். லோகேஷ் கனகராஜ் எதிர்காலத்தில் மிகப்பெரிய இடத்தில் இருப்பார் என்று நினைக்கிறேன். அவர்மட்டுமல்ல, அவரிடம் பணிபுரியும் ஒவ்வொரு உதவி இயக்குனர்களும் மிகவும் திறமையானவர்கள். அவர்கள் அனைவருமே விரைவில் இயக்குனர்கள் ஆவார்கள்

விஜய் அண்ணா குறித்து நான் ஒரு குட்டி ஸ்டோரி சொல்ல விரும்புகிறேன். சின்ன வயதில் நான் காதலுக்கு மரியாதை உள்பட ஒருசில படங்களை பார்த்து அவருடைய நடிப்பை பார்த்து பிரமித்தேன் கில்லி என்ற படம் வந்த பிறகுதான் நான் அவருடைய ரசிகராக மாறினேன். அதன்பின்னர்தான் நான் அவரை மிகவும் உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தேன்

ஒவ்வொருவருக்கும் திருமணத்தின்போது நெருங்கிய உறவினர்கள் வரவேண்டும் என்றுதான் ஆசைப்படுவார்கள். ஆனால் என்னுடைய திருமணத்தின்போது விஜய் அவர்கள் கலந்து கொண்டு தாலியை எடுத்துக் கொடுக்க வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன். நான் ஆசைப்பட்டது போலவே அவர் எனது திருமணத்தில் கலந்து கொண்டு எனக்கு தாலி எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார். அன்று முதல் அவரை நான் என்னுடைய மரியாதைக்குரிய நபராக பார்க்க தொடங்கினேன்’ என்று சாந்தனு கூறினார்

More News

விஜய் நடிப்பு குறித்து பேச எனக்கு எந்த தகுதியும் இல்லை: அர்ஜூன் தாஸ்

விஜய் நடித்த மாஸ்டர் பட விழாவில் நடிகர் அர்ஜுன் தாஸ் பேசியதாவது: விஜய் நடித்த முந்தைய படங்களின் ஆடியோ விழாவில் கலந்துகொள்ள பாஸ் கிடைக்குமா

ஈசிஆர் பக்கம் ரெய்டுக்கு போகாதீங்க: கேபிஒய் தீனா

கலக்க போவது யாரு' நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி, லோகேஷ் கனகராஜின் 'கைதி' படத்தில் நடித்த தீனா, 'மாஸ்டர்' ஆடியோ விழாவில் பேசியதாவது:

தாயின் வேண்டுகோளை மேடையிலேயே நிறைவேற்றிய விஜய்!

தளபதி விஜய் நடித்த ''மாஸ்டர்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது நடைபெற்று வரும் நிலையில் இருக்கும் இந்த விழாவில் விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்ஏ சந்திரசேகர்

ரெய்டு வந்தாலும், ரெய்டு சென்றாலும் விஜய் தான் ஜெயிப்பாரு: பொன் பார்த்திபன் 

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படத்தில் இசை வெளியீட்டு விழா தற்போது நடைபெற்று வருகிறது, விஜய், விஜய் சேதுபதி உள்பட படக்குழுவினர் அனைவரும் இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.

வெற்றிடத்தை விஜய் தான் நிரப்ப வேண்டும்: தீர்மானம் நிறைவேற்றம்

தமிழகத்தில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட ஒருசிலர் கூறி வரும் நிலையில் தற்போது விஜய் ரசிகர்களும் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது உண்மைதான்