சாந்தனு பாக்யராஜின் 'வாய்மை' ரிலீஸ் தேதி

  • IndiaGlitz, [Thursday,September 01 2016]

இந்தியாவின் சிறந்த திரைக்கதையாசிரியர் என பெயர் பெற்ற கே.பாக்யராஜ் அவர்களின் மகன் சாந்தனு, கோலிவுட் திரையுலகில் பல படங்களில் நடித்திருந்தாலும் இன்னும் ஒரு சூப்பர் ஹிட் வெற்றி கூட அவருக்கு கிடைக்கவில்லை.
இந்நிலையில் அவர் பெரிதும் நம்பியிருக்கும் படம் 'வாய்மை', இந்த படத்தின் வித்தியாசமான ஸ்டில்களும், பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றிருப்பதால் இந்த படம் சாந்தனுவுக்கு நிச்சயம் ஒரு நல்ல திருப்பு முனையை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படம் வரும் 8ஆம் தேதி ரிலீஸ் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சாந்தனுவுடன் முக்கிய வேடத்தில் கவுண்டமணி நடித்துள்ள இந்த படத்தில் ராம்கி, முக்தா பானு, தியாகராஜன், பிரித்வி பாண்டியராஜன், ஊர்வசி, பூர்ணிமா பாக்யராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். செந்தில்குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார்.