நடன இயக்குனர் பிருந்தா படத்தில் இணைந்த இளம் இசையமைப்பாளர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல நடன இயக்குனர் பிருந்தா இயக்கத்தில் ’ஹே அனாமிகா என்ற திரைப்படம் உருவாகி வருகிறது என்பதும் துல்கர் சல்மான், காஜல் அகர்வால் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் பிருந்தா இயக்கவுள்ள இன்னொரு படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. பிருந்தா இயக்கும் அடுத்த படத்தில் சாந்தனு பாக்யராஜ் மற்றும் அவரது மனைவி கிகிவிஜய் இருவரும் இணைந்து நடிக்கின்றனர். இந்த படத்தின் டைட்டிலுடன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தரண் குமார் இசையமைக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே ‘பாரிஜாதம்’, ‘லாடம்’, ‘போடா போடி’, ‘நட்புன்னா என்னன்னு தெரியுமா? உள்பட ஒருசில படங்களுக்கு இசையமைத்துள்ளார். டாட்சன் நிறுவனத்தின் இரண்டாவது படைப்பான இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.
Thank you so much Sonu for letting me score this one ❤️ @BrindhaGopal1 master making this all the more special ?? https://t.co/6lfE1svqXM
— Dharan kumar (@dharankumar_c) November 26, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments