நடன இயக்குனர் பிருந்தா படத்தில் இணைந்த இளம் இசையமைப்பாளர்!

  • IndiaGlitz, [Thursday,November 26 2020]

பிரபல நடன இயக்குனர் பிருந்தா இயக்கத்தில் ’ஹே அனாமிகா என்ற திரைப்படம் உருவாகி வருகிறது என்பதும் துல்கர் சல்மான், காஜல் அகர்வால் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் பிருந்தா இயக்கவுள்ள இன்னொரு படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. பிருந்தா இயக்கும் அடுத்த படத்தில் சாந்தனு பாக்யராஜ் மற்றும் அவரது மனைவி கிகிவிஜய் இருவரும் இணைந்து நடிக்கின்றனர். இந்த படத்தின் டைட்டிலுடன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தரண் குமார் இசையமைக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே ‘பாரிஜாதம்’, ‘லாடம்’, ‘போடா போடி’, ‘நட்புன்னா என்னன்னு தெரியுமா? உள்பட ஒருசில படங்களுக்கு இசையமைத்துள்ளார். டாட்சன் நிறுவனத்தின் இரண்டாவது படைப்பான இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

More News

ரசிகர்களை இழக்கிறாரா ரம்யா பாண்டியன்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்திலிருந்தே பார்வையாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுவரும் போட்டியாளர் ரம்யா மட்டுமே. குறிப்பாக சுரேஷ் சக்ரவர்த்தி இடமிருந்து எவிக்சன் பாஸை திறமையாக பெற்று

வாங்க நாம பிக்பாஸ்க்கு போவோம். தமிழ் ஹீரோவை அழைக்கும் பிரேம்ஜி அமரன்

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 50 நாட்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில் கடந்த சீசன்களில் உள்ள விறுவிறுப்பு இந்த சீசனில் குறைவு என்றே பார்வையாளர்களின் கருத்தாக இருக்கிறது.

ரியோ-ஆஜித் கால்சென்டர் உரையாடலை கலாய்க்கும் ரம்யா!

பிக்பாஸ் வீட்டில் தற்போது கால்சென்டர் டாஸ்க் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இதற்கு முன்னர் பாலாஜி-அர்ச்சனா, சனம்-சம்யுக்தா, ரம்யா-ஜித்தன் ரமேஷ் மற்றும் கேபி-சோம் ஆகியோர்களின் உரையாடல் நடைபெற்றது

நிவர் புயல் கரையை கடந்தது எப்போது? வானிலை ஆய்வு மையம் தகவல்!

வங்க கடலில் உருவான நிவர் புயல் நேற்று இரவு கரையை கடக்கும் என ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் நேற்று இரவு சரியாக 11.30 மணி முதல் அதிகாலை 2 30 மணி வரை

மாரடைப்பால் மறைந்தார் மாரடோனா: பேரதிர்ச்சியில் ரசிகர்கள்

உலக கால்பந்தாட்ட ஜாம்பவான் மாரடோனா திடீரென மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்த தகவல் அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அவருக்கு வயது 60