தடைகளை உடை. புதிய சரித்திரம் படை. நடிகர் சந்தானம்
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னை மெரீனா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்று வரும் போராட்டத்திற்கு பல்வேறு திரையுலக நட்சத்திரங்கள் ஆதரவுக்கரம் நீட்டியுள்ள நிலையில் தற்போது நடிகர் சந்தானமும் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
அவர் இதுகுறித்து கூறியபோது, 'தமிழக மக்கள் அனைவருக்கும் எனது பண்பான வணக்கம். ஜல்லிக்கட்டு. இதைப்பற்றி நான் எதுவும் புதுசா சொல்லப்போவதில்லை. எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். ஜல்லிக்கட்டு என்பதை ஏறு தழுவுதல் என்றும் சொல்வார்கள். நம்முடைய பாரம்பரியமான வீர விளையாட்டு. இதை தடை செய்வதற்கு யாருக்கும் எந்த உரிமையும் இல்லை. இதை மறுபடி நடத்த வேண்டும் என்று போராடும் அனைவருக்கும் நான் ஆதரவு தருகிறேன். தடைகளை உடை, புதிய சரித்திரம் படை..வாழ்க தமிழ்
தமிழன்டா!!!#SupportJallikattu #JusticeforJallikattu #youthpower pic.twitter.com/kiqHc52s48
— Santhanam (@iamsanthanam) January 18, 2017
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com