close
Choose your channels

சந்தானம் நடித்த 'வாலிப ராஜா' ரிலீஸ் தேதி

Sunday, September 13, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட்டின் நம்பர் ஒன் காமெடி நடிகராக இருந்த சந்தானம், ஹீரோவாக மாறி சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் 'இனிமே இப்படித்தான்'. இந்த படத்தை அடுத்து அவர் நாயகனாக நடித்துள்ள மற்றொரு திரைப்படமான 'வாலிப ராஜா' என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வரும் செப்டம்பர் 24 என தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தில் "கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தில் நடித்த சேது, விசாகா சிங் ஆகியோர்கள் இணைந்து நடித்துள்ளனர். இவர்களுடன் ஜெயப்பிரகாஷ், விடிவி கணேஷ், தேவதர்ஷினி, சித்ரா லட்சுமணன், நீலிமா ராணி, 'நான்கடவுள்' ராஜேந்திரன், உள்பட பலர் நடித்துள்ளனர். ரதன் இசையமைத்துள்ள இந்த படத்தை சாய்கோகு ராமநாத் இயக்கியுள்ளார்.

சமீபத்தில் பல வெற்றிப்படங்களை ரிலீஸ் செய்துவரும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தையும் வெளியிடுவதாக கூறப்படுகிறது. முழுக்க முழுக்க காமெடி காட்சிகள் அடங்கிய இந்த படம் 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தைவிட இருமடங்கு காமெடி காட்சிகள் அடங்கிய படம் என சேது கூறியுள்ளார். கடந்த மாதமே இந்த படம் சென்சார் செய்யப்பட்டு 'யூ' சர்டிபிகேட் பெற்றுவிட்ட நிலையிலும் அடுத்தடுத்து பல படங்கள் தொடர்ந்து ரிலீஸாகியதால் தகுந்த ரிலீஸ் நேரத்திற்காக எதிர்பார்த்து காத்திருந்தது. தற்போது அந்த நேரம் வந்துவிட்டதால், வரும் 24 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment