விஜய், விஷாலுடன் முதன்முதலில் மோதும் சந்தானம்

  • IndiaGlitz, [Monday,November 28 2016]

இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' மற்றும் விஷால் நடித்த 'கத்திச்சண்டை' ஆகிய திரைப்படங்கள் வரும் பொங்கல் திருநாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இதே நாளில் சந்தானம் நடித்து வரும் 'சர்வர் சுந்தரம்' படமும் வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
சந்தானம், வைபவி, நாகேஷ் பேரன் பிஜேஷ், ஆனந்த்ராஜ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஆனந்த் பால்கி இயக்கியுள்ளார். கெனன்யா பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.
'சர்வம் சுந்தரம்' படத்தை அடுத்து சந்தானம், கே.எஸ்.மணிகண்டன் இயகக்த்தில் 'ஓடி ஓடி உழைக்கனும், 'சேதுராமன் இயக்கத்தில் 'சக்க போடு போடு ராஜா' மற்றும் செல்வராகவன் இயக்கத்தில் ஒரு படமும் நடிக்கவுள்ளார்.