சந்தானம் ஹீரோவாக நடித்த 'வாலிப ராஜா' ரிலீஸ் தேதி?

  • IndiaGlitz, [Friday,September 04 2015]

சந்தானம் தயாரிப்பில் அவரே ஹீரோவாக நடித்த 'இனிமே இப்படித்தான்' திரைப்படம் வெற்றி பெற்றதை அடுத்து சந்தானம் மீண்டும் ஹீரோவாக நடித்திருக்கும் படம் 'வாலிப ராஜா'. 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தில் சந்தானத்துடன் நடித்த சேது, விசாகாசிங் ஆகியோர் இந்த படத்திலும் நடித்துள்ளனர். மேலும் விடிவி கணேஷ், தேவதர்ஷினி, ஜெயப்பிரகாஷ், சித்ரா லட்சுமணன், நீலிமா ராணி, 'நான்கடவுள்' ராஜேந்திரன், மீரா கிருஷ்ணன், கனல் கண்ணன் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை சாய் கோகுல் ராம்நாத் என்பவர் இயக்கியுள்ளார். ராதன் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு லோகநாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு, போஸ்ட் புரடொக்ஷன் மற்றும் அனைத்து பணிகளும் முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராக இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அனேகமாக இம்மாதம் 24ஆம் தேதி இந்த படம் வெளியாவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

விரைவில் இந்த படத்தின் பாடல் வெளியீடு, மற்றும் டிரைலர் வெளியீடு குறித்த அறிவிப்பு வரும் என்றும், அந்த அறிவிப்பில் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியும் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.